TVK.. விமர்சனங்களுக்கு டீசன்ட்டா.. டீப்பா .. ஆதாரத்தோடு பதில்.. தவெகவினருக்கு விஜய் உத்தரவு

Nov 03, 2024,04:25 PM IST

சென்னை: தவெக குறித்து யார் விமர்சனம் செய்தாலும் தனி நபர் விமர்சனம் செய்யாமல், சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் விமர்சிக்குமாறு தனது கட்சியினருக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை பனையூரில் இன்று தவெக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டமும், செயற்குழுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டார். அப்போது கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை விஜய் வழங்கினார்.


முக்கியமாக, கட்சி குறித்தும், கொள்கை குறித்தும், என்னைப் பற்றியும் யார் விமர்சித்தாலும், அவர்களுக்கு தனி நபர் விமர்சனத்தை தவிர்த்து விட்டு ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என்று விஜய் முக்கியமாக அறிவுறுத்தியுள்ளார்.




அதேபோல சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே தயாராகுமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டார். வாக்கு சேகரிக்கும்போது பெண் நிர்வாகிகளின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாநாட்டில் சொன்னபடி கட்சியின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினாராம்.


கட்சிக் கொடி ஏற்றுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.  இதுதவிர, பூத் கமிட்டிகளில்  அதிக பெண்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும்  விஜய் உத்தரவிட்டுள்ளார்.


இதுதவிர 28 தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்,  மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகையில்,  மத்திய அரசை காரணம் காட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் தமிழ்நாடு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம், மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம், கால வரையறை நிர்ணயம் செய்து மது கடைகளை மூட வலியுறுத்தி ஒரு தீர்மானம், மாவட்டந்தோறும் காமராசர் அரசு மாதிரிப் பள்ளி உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த விஜய், வழக்கம் போல காருக்குள்ளேயே அமர்ந்தபடி உள்ளே செல்லவில்லை. மாறாக கட்சி அலுவலகத்திற்கு வெளியில் காரிலிருந்து இறங்கிய விஜய், அங்கு கூடியிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்து விட்டு பின்னர் உள்ளே சென்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்