சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், நடிகை விஜயலட்சுமி.
நடிகை விஜயலட்சுமி - சீமான் இடையிலான மோதல் உலகம் அறிந்தது. இருவருக்கும் இடையிலான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராமல் நீரு பூத்த நெருப்பு போல இருந்துகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. விஜய்யுடன், பிரண்ட்ஸ் படத்தில் இணைந்து அவரது தங்கை வேடத்தில் நடித்தவர் விஜயலட்சுமி என்பது நினைவிருக்கலாம். விஜயலட்சுமி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் கூறியிருப்பதாவது:
என்ன மிஸ்டர் சீமான்.. சாபம்ல்லாம் விடறீங்க.. நேத்து விஜய் அண்ணனை, ஒன்னு இந்தப் பக்கம் நிக்கனும், இல்லாட்டி அந்தப் பக்கம் நிக்கனும். இல்லாட்டி லாரி அடிச்சு செத்துப் போய்ருவ்னு சாபம்ல்லாம் விட்டிருக்கீங்க. நீங்க மட்டும் உத்தமரா சீமான். உங்க ரூட்டுக்கே வர்றேன். விஜய் அண்ணன் ஆகட்டும், திமுக ஆகட்டும், கொள்கை ரீதியாத்தானே தவறு பண்ணிருக்காங்க. அதையும் நீங்கதான் சொல்றீங்க, மக்கள் சொல்லலை.
அவங்களே லாரி அடிச்சு சாவாங்கன்னா, எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு, நடு ரோட்டில் விட்டீங்களே.. நீங்க எது அடிச்சு சாக மாட்டீங்க மிஸ்டர் சீமான். முதல்ல போய் உங்க கட்சி ஓட்டைய அடைங்க. உங்க கட்சிலதான் நிறைய ஊழல் நடக்குதாம். திருச்சி சூர்யா வேற உங்க ஆபாச வீடியோவை வெளியிட்டு உங்க மானத்தை வாங்கப் போறாராம்.
திமுகவுக்கு என்ன செய்யனும்னு திமுகவுக்குத் தெரியும். விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும்னு விஜய் அண்ணனுக்குத் தெரியும். உலகத்திலேயே உங்களுக்கு மட்டுதான் தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையைச் செய்யத் தெரியாமல், காலை எழுந்தா பப்ளிசிட்டி தேடிக்கிட்டு நீங்கதான் கூமுட்டை மாதிரி அலஞ்சிட்டிருக்கீங்க.
பெரிய உத்தமர் மாதிரியும், கண்ணகி மாதிரியும் சாபம் விடாதீங்க. நான்தான் பெங்களூர்ல இருந்து 24 மணி நேரமும் உங்களுக்கு சாபம் விட்டிட்டிருக்கேனே. கொள்கை ரீதியா தவறு செய்றவங்க லாரி அடிச்சு சாவாங்கன்னா, நீங்க தமிழ்நாட்டு மக்களால செருப்பால் அடிச்சு ஒரு நாள் சாவீங்க என்று கோபாவேசமாக பேசியுள்ளார் விஜயலட்சுமி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}