Vijay Speech: இறுமாப்புடன் 200 என்பதா?.. 2026ல் திமுகவை மக்கள் மைனஸாக்குவார்கள்.. விஜய் ஆவேசம்!

Dec 06, 2024,10:16 PM IST

சென்னை: மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத, கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி,  இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளத்துடன் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை..  நீங்க உங்களோட சுயநலத்துக்காக போட்டு வரும் உங்களது கூட்டணிக் கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.


அண்ணல் அம்பேத்கர் குறித்த அனைவருக்குமான அம்பேத்கர் என்ற நூல் இன்று சென்னயைில் வெளியிடப்பட்டது. நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டத்தில் விஜய்யும் படு அனல் பறக்க பேசினார்.


விஜய்யின் பேச்சு:




அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் இந்த விழாவில் கலந்து கொள்வதை மிகப் பெரிய வரமாக நினைக்கிறேன்.  எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த விகடன் குழுமத்துக்கு நன்றிகள்.


உங்களுக்கு விருப்பமான ஹாலிடே இடம் எது என்று யாரைக் கேட்டாலும் நியூயார்க் போகணும் என்று சொல்வார்கள். 2, 3 நாள் போய் தங்கி வருவதே சாதனையாக கருதுகிறார்கள். 100 வருடத்திற்கு முன்பு நியூயார்க் போய், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற சாதனையாளர் ஒருவர் இருக்கிறார். அவர் போனது முக்கியமல்ல,  எந்த சூழலில் படித்து சாதித்தார் என்பதுதான் முக்கியம்.  இந்த சாதியில் பிறந்திருக்கே,  உனக்கெல்லாம் படிக்கத் தகுதியில்லை என்று அவர் வாழும் சமூகமே அவரை தடுத்தது. ஆனால் அதையும் மீறி பள்ளிக்கூடம் போனார், ஆனால் அங்கு சமமாக உட்கார அனுமதி இல்லை. தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கக் கூட அனுமதி இல்லை. அவருக்கு ஒரு சக்தி மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தது. அதுதான் அவருக்குள் இருந்த வைராக்கியம்தான் அது. அந்த சின்ன வயதில் எப்படி இப்படி ஒரு வைராக்கியம் வந்தது என்றால் பிரமிப்பாகவே இருக்கிறது. அந்த வைராக்கியம்தான் இந்த நாட்டின் தலை சிறந்த அறிவாளியாக மாற்றவும் அதுதான் காரணமாக இருந்தது. 


அம்பேத்கரின் வரலாறு காணாத டிரான்ஸ்பார்மேஷன்




எனக்குத் தெரிந்த உலக வரலாற்றில் யாரும் இப்படி ஒரு டிரான்ஸ்பார்மேஷனை பார்த்திருக்க மாட்டார்கள். வன்மத்தை மட்டும் தனக்கு காட்டிய சமூகத்துக்கு அவர் திருப்பி என்ன செய்தார் என்று படித்தால், பிறப்பால் அனைவரும் சமம். எந்த சாதி, மதமாக இருந்தாலும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டை உறுதி செய்யும் அரசியல் சாசனத்தை வழங்கி அனைவருக்கும் பெருமை தேடித் தந்தவர். அவர்தான் அன்னல் அம்பேத்கர். 


இந்தப் புத்தகத்தில் நூறுக்கும் மேற்பட்ட கட்டுரை, நேர்காணல்கள் உள்ளன. அதில் என்னை யோசிக்க வைத்தது அம்பேத்கரின் பயோகிராபிதான். அதில் அவரது வாழ்க்கையில் பாதித்த 6 சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் 2 விஷயம் என்னை ரொம்பப் பாதித்தது. 9 வயதாக இருக்கும்போது அம்பேத்கரும், அவரது சகோதரரும் அப்பாவைப் பார்க்க போகிறார்கள். மாட்டு வண்டிக்காக காத்திருந்தபோது யாருமே ஏற்றத் தயாராக இல்லை. தீண்டாமைக் கொடுமை. ஒரு வண்டிக்காரர் ஒத்துக் கொள்கிறார். ஆனால் தீட்டு பட்டு விடும் என்று கூறி வண்டிக்காரர் நடந்து போகிறார்.  பசங்க வண்டி ஓட்டிட்டு வர்றாங்க. ஒரு நாள் முழுக்க, தண்ணீர் கூட கொடுக்காமல் அந்தப் பயணம் எவ்வளவு கொடுமையாக இருந்தது என்பதைச் சொல்லியுள்ளார் அம்பேத்கர்.


தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் மாற்றம் தேவை




லண்டன், அமெரிக்காவுக்கு எல்லாம் போய் விட்டு, வழக்கறிஞராக திரும்பி வருகிறார். மும்பை அருகே கிராமத்திற்கு போகிறார். அப்போது அரசு பொறுப்பில் இருக்கிறார். வண்டி ஏற்பாடு செய்ய நினைக்கிறார்கள். ஆனால் வண்டி ஓட்டுகிறவர் அவருக்கு சமமாக உட்கார யோசிக்கிறார், மறுக்கிறார். லண்டன் போய் பாரிஸ்டர் பட்டம் வென்றவரை விட தன்னை உயர்ந்ததாக நினைக்கிறார். அதுதான் அவரை சமுத்துவக்துக்காக போராட வைத்தது. இன்று அவர் இருந்திருந்தால் என்னை நினைப்பார்..  இன்னிக்கு இருக்கும் இந்தியாவைப் பார்த்து பெருமைப்படுவாரா. வருத்தப்படுவாரா.. எதை நினைத்து வருத்தப்படுவார்.


நாடு முழு வளர்ச்சி அடைய ஜனநாயகம் காக்கப்படணும். அரசியலமலைப்பு சட்டம் காக்கப்படணும். பொறுப்பு, கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கணும். ப்ரீ அன்ட் பேர் எலக்ஷன் தான் ஜனாயகத்தை காக்கும். தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்குது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்களுக்கு இருக்கணும்.  அது அமைய வேண்டும் என்றால் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படணும்.


ஏப்ரல் 14 அம்பேத்கரின் பிறந்த நாள். அன்னிக்குதான் ஜனநாயக உரிமைகள் பிறந்த தினம். அந்தத் தேதியை ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்.  அப்படின்னு ஒரு தாழ்மையான கோரிக்கையை. ஒன்றிய அரசிடம் வைக்கிறேன். அம்பேத்கரை யோசிக்கும்போது சட்டம் ஒழுங்கு சமூக நீதியை யோசிக்காமல் இருக்க முடியாது. மணிப்பூரில் நடப்பது எல்லோருக்கும் தெரியும். கண்டுக்கவே கண்டுக்காமல் ஒரு அரசு நம்மை மேலிருந்து ஆண்டு கொண்டிருக்கிறது. சரி அங்குதான் அப்படி என்றால் இங்குள்ள அரசு எப்படி இருக்கு..  வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். சமூக நீதி பேசும் அரசு எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரியே தெரியலை. இத்தனை வருடங்கள் தாண்டி துரும்பைக் கூ கிள்ளிப் போடலை. அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலை குணிந்து போவார்.


வேங்கைவயல் அவலத்திற்குத் தீர்வு இல்லையே




குரல் கொடுக்கணும். ஆனால் நடக்கும் பிரச்சினை ஒன்றா இரண்டா. பெண்களுக்கு எதிராக, மனித உயிர்களுக்கு எதிராக எத்தனை நடக்கிறது. இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு என்ன.. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முறையாக, முழுமையாக அளிக்கும் மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு  அமைந்தால் போதும். 


தினசரி நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்துக்காக டிவீட் போடுவது, சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்துக்காக நானும் மக்களோடு மக்களாக இருப்பதாக காட்டிக் கொள்வதும், சம்பிரதாயத்துக்காக மழைத் தண்ணில நின்னு போட்டோ எடுப்பதும் எனக்கு அதில் உடன்பாடே இல்லை. என்ன பண்றது. சம்பிரதாயத்துக்காக  சில நேரம் செய்ய வேண்டியதா போய்ருது.  மக்களோட உரிமைகளோடு உணர்வப்பூர்மாக அவர்களுடன் இருக்க வேண்டும்.  மக்களுக்கு என்ன பிரச்சினை நடந்தாலும் உரிமைகளுக்காகவும், உணர்வப்பூர்வாக இருப்பேன். எப்பவும் அப்படித்தான் இருப்பேன்.


திமுகவுக்கு சவால் 




மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளமாக முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை..  நீங்க உங்களோட சுயநலத்துக்காக எல்லா வழிகளிலும் பாதுகாத்து வரும் உங்களது கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.


விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளன் அவர்கள் அவங்களால இன்னிக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எத்தனை பிரஷர் இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தாலும் நான் இப்ப சொல்றேன்.. அவருடைய மனசு முழுக்க முழுக்க இங்க நம்மளோடதான் இருக்கும் என்று பேசினார் விஜய்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்