புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமியை கொடூரமாக துன்புறுத்தி படுகொலை செய்த நபர்களுக்கு ஈவு இரக்கமின்றி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில், 9 வயது சிறுமி குரூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் புதுச்சேரியே கொந்தளித்துப் போயுள்ளது. புதுச்சேரி முழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
இரத்தக்களறி (சிறுகதை)
4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.520 உயர்வு!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?