த.வெ.க. தலைவர் விஜய்.. மதுரையில் போட்டியிடுகிறாரா?.. பரபரப்பைக் கிளப்பிய போஸ்டர்!

Oct 19, 2024,07:24 PM IST

மதுரை:   2026 சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடப் போவதாக புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டர்களால் மதுரை விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.


நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்தக் கட்சி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. மாநாடும் கூட பலரால் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.


இந்த நிலையில் மதுரையில் தவெக சார்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. காரணம், அதில் மதுரை வடக்குத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் விஜய் என்று கூறி தவெக கட்சியினர்  வாசகங்களை இடம் பெற வைத்துள்ளனர். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




மதுரையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் விஜய் போட்டியிடப் போகிறாரா.. அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மதுரை விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனரா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.


இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது விஷயம் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. காரணம், விஜய் மிகத் தெளிவாக திட்டமிட்டே ஒவ்வொரு வேலையையும் செய்து வருகிறார். இதனால்தான் பல்வேறு கட்சிகளும் அவரது நடவடிக்கைகளை ஒருவித படபடப்புடன் கவனித்துக் கொண்டுள்ளன.


ஒரு வேளை இந்த போஸ்டரில் உள்ளபடி மதுரையில் விஜய் போட்டியிடுவதாக இருந்தால் அது புதிய வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த பல வருடங்களாக தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல் தலைவர்கள் யாரும் மதுரையில் போட்டியிட்டதில்லை. மதுரை மட்டுமல்லாமல், அண்டை மாவட்டங்களிலும் கூட ஸ்டார் அரசியல் வேட்பாளர்கள் போட்டியிட்டதில்லை.


தேமுதிகவை நிறுவிய விஜயகாந்த் கூட மதுரையில் ஒரு முறை கூட போட்டியிட்டதில்லை.  திமுகவை எடுத்துக் கொண்டால் மு.க.அழகிரி மட்டுமே மதுரையில் போட்டியிட்டு வென்றுள்ளார். அதிமுக தரப்பில் மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தேனி மாவட்டத்தில் போட்டியிட்டு வென்றுள்ளனர். கமல்ஹாசன் கோவையில்தான் போட்டியிட்டார்.


தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. இந்த நிலையில் விஜய், மதுரையில் போட்டியிடுவதாக இருந்தால் அது நிச்சயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிகிறது. 


அதிமுகவின் கோட்டை




மதுரை வடக்குத் தொகுதியில் செல்லூர், நரிமேடு, கோரிப்பாளையம், பீபிகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், ஷெனாய்நகர், புதூர், விஸ்வநாதபுரம், ரிசர்வ் லைன், ஜவஹர்புரம், மேலமடை போன்ற முக்கியமான பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொகுதி கடந்த 


மதுரை மாநகராட்சியின் வார்டு எண்கள் 2 முதல் 8 வரையிலும், அதேபோல 11 முதல் 15 வரையிலும், 17 முதல் 20வது வார்டு வரையிலும் இந்தத் தொகுதிக்குள் வருகின்றன.  கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியில் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 3 தேர்தல்களில் 2 முறை அதிமுக இங்கு வெற்றி பெற்றுள்ளது. 


2011ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் ராஜன் செல்லப்பா வெற்றி பெற்றார். 2021ல் நடந்த  தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இத்தொகுதியில் தற்போது திமுகவின் கோ. தளபதி உறுப்பினராக இருந்து வருகிறார். தோராயமாக இந்தத் தொகுதியில் இரண்டரை லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.


மதுரை வடக்கில் விஜய் நிற்பாரா.. புதிய திருப்பத்தை ஏற்படுத்துவாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்