TVK conference: இதெல்லாம் கண்டிப்பாக செய்யக் கூடாது.. தவெக தொண்டர்களுக்கு ஸ்டிரிக்ட் உத்தரவு!

Sep 25, 2024,12:52 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் கொள்கை பிரகடன முதல் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது தனது அடுத்த படமான தளபதி 69 ஆவது படத்தில் கமிட்டாகி உள்ளார். இதுவே தமிழ் சினிமாவிற்கு விஜய் கொடுக்கும் கடைசி படம். இப்படம் அடுத்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதற்கிடையே விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அரசு நிர்ணயித்த முன்னேற்பாடுகளை செய்து முடிக்க இயலாத காரணத்தினால் மாநாடு நடத்துவது சற்று தள்ளிப் போயுள்ளது.




அதன்படி, தவெகவின் முதல் மாநாடு  அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் மாலை 4 மணியளவில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அப்போது நமது தமிழக வெற்றிக்  கழகத்தின் கொள்கைகள்,நாம் அடையப் போகும் இலக்குகள் அறிவிக்கும் முதல் மாநாடு விழா  அரசியல் திருவிழாவாகவும், பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளதாக கூறியிருந்தார். ‌இதனால் ரசிகர்கள் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 


இதனைத் தொடர்ந்து  மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கட்சித் தலைவர் விஜய் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாராம். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மூலம் இந்த உத்தரவு தொண்டர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது.

* பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

* சாலையில் செல்ல கூடிய வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது.

* இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபட கூடாது.

* வேன்களில் அழைத்து வருபவர்களை சரியான எண்ணிக்கையில் அழைத்து வரவேண்டும்.

* காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும்.

* கிணறு உள்ளிட்ட ஆபத்தான பகுதிகள் இருந்தால் தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

* மருத்துவக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாராம் விஜய்.


மாநாட்டுக்கு வரும் தொண்டர்களால் கட்சிக்கோ, மக்களுக்கோ, காவல்துறைக்கோ எந்த வகையிலும்  பிரச்சினை வரக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். காரணம், விஷமிகள் உள்ளே புகுந்து கெட்ட பெயரை ஏற்படுத்தலாம் என்பதால் கட்சியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.


இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கொள்கை பிரகடன ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பொறுப்பாளர்கள் அணித்தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மாநாட்டிற்கான பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்