TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

Nov 22, 2024,06:56 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


தமிழக வெற்றிக் கழகம் கடந்த பிப்வரி மாதம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கட்சி குறித்த வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் தவெக கட்சியின் மாநாடு வெகு பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு இது நாள் வரை மாவட்ட செயலாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. 




இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போது மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்கள்  தான் இன்று வரைக்கும் தவெகவின் மாவட்ட செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். 


இந்த நிலையில் தமிழ்நாட்டை 100 மாவட்டங்களாக நிர்வாக ரீதியாக பிரித்து 100 மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க கட்சி மேலிடம் தீர்மானித்துள்ளது. தற்போது மாவட்டச் செயலாளர்களை இறுதி செய்யும் பணியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.


சென்னைபனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியாக  நிர்வாகிகளை அழைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்களிடம் உங்களுக்கு யார் மாவட்ட செயலாளர்களாக வேண்டும். நீங்கள் யாரை மாவட்ட செயலாளர்களாக தேர்வு செய்வீர்கள் என்று கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவை பெறுபவர்கள் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட உள்ளனர். 


மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி மாவட்ட அமைப்பாளர்கள், பொருளாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பட்டியல் தமிழக வெற்றிக் கழக தலைவரிடம் கொடுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட பின் அறிவிக்கப்பட உள்ளது. இந்த 100 செயலாளர்களின் பட்டியல் ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


கடந்த செவ்வாய் கிழமை செங்கல்பட்டு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது அடுத்தடுத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்