கில்லி காரப் பொறி தெரியும்.. விஜய் போட்ட உருளைக்கிழங்கு காரக் கறி தெரியுமா.. என்னா டேஸ்ட்டு.. செம!

Jun 28, 2024,05:37 PM IST

சென்னை:   கை நிறைய பரிசு.. மனசு நிறைய புன்னகையுடன் கூடிய போட்டோ... வயிறு நிறைய சூப்பர் சாப்பாடு.. இப்படி ஒரே நாளில் மாணவ மாணவியரையும், அவர்களது பெற்றோர்களையும் ஹேப்பியாக்கி விட்டார் நடிகர் விஜய்.


நடந்து முடிந்த பத்தாம்  மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா இன்று சென்னை திருவான்மியூர் கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது. இதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெள்ளை  சட்டையுடன் மாஸாக என்ட்ரி கொடுத்தார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும், சான்றிதழ்களையும் வழங்கினார். தமிழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 2 பேருக்கு வைர மோதிரம் பரிசளித்தார் நடிகர் விஜய்.




இதனைத் தொடர்ந்து மேடையில் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பி என்று ஆரம்பித்து அவர் பேசிய பேச்சு அத்தனை பேரையும் கவர்ந்தது. கடைசியாக  say no to temporary pleasure ..say no to drugs என நீங்க எல்லோரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு உரையை முடித்தார் விஜய்.


இன்று மாலை வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இடையில் லன்ச் பிரேக்கும் வந்தது. அப்போது போட்ட சாப்பாடுதாங்க இப்போது வைரலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்யாண விருந்து போல் தடபுடலான ரெசிபிகளுடன் உணவுகள் தயாராக இருந்தன. அதில் இடம் பெற்ற ஐட்டங்கள் எல்லாமே வேற லெவல்தான்.. கில்லி படத்தின் மூலம் காரப்பொறி பிரபலமானது.. இன்றைய லன்ச்சிலோ, உருளைக் காரக்கறி என்ற ஒரு ஐட்டத்தைப் போட்டு அசத்தி விட்டார் விஜய்.


அது என்ன உருளைக்கிழங்கு காரக் கறி? அப்படின்னு நீங்க கேட்பது புரிகிறது. அவங்க மட்டும்தான் சாப்பிடுவாங்களா.. நாமளும் அதை செஞ்சு  சாப்பிடலாமா.. அது எப்படி செய்யணும்? வாங்க பார்ப்போம். 




உருளைக்கிழங்கு வேக வைத்து தோல் உரித்தது - 500 கிராம், 

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் - 7

குண்டு வர மிளகாய் -2

மஞ்சள் தூள்-சிறிதளவு

கடுகு -1 டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - தேவையான அளவு பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு 


முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் மிளகு மற்றும் மிளகாய் வற்றல் நன்றாக வறுத்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை காயவைத்து வானொலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், அதில் கருவேப்பிலை , குண்டூர் மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். 


இதன் பின்னர் அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள், போட வேண்டும். வேக வைத்த உருளைக்கிழங்கு போட்டு, அதனுடன் தேவையான உப்பு சேர்க்க வேண்டும்.அரைத்து வைத்த  பொடியை மேலே தூவி அதனை நன்றாக கிளற வேண்டும்.  இறுதியாக கருவேப்பிலை கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி போட்டு இறக்கவும். அருமையான சூடான சாம்பாருக்கு ஏற்ற  காம்பினேஷன் உருளைகாரக் கறி தயார்.. சும்மா சொல்லக் கூடாதுங்க.. செம சைட் டிஷ் இது.. செஞ்சு பார்த்து சாப்பிடுங்க.


ஆனியன் மணிலா: 


இதுவும் இன்று விஜய் வைத்த விருந்தில் இடம் பெற்ற இன்னொரு ஐட்டம்.. என்னடா பேரு வித்தியாசமாக இருக்குன்னு யோசிக்கிறீங்களா. அது வேற ஒன்னும் இல்லங்க. மணிலா என்பது பச்சை நிலக்கடலை தான்.. அதையும் வெங்காயத்தையும் போட்டு அந்த காம்பினேஷன் ஃபுட் இது.


இது செய்யத் தேவையான பொருட்கள்: 


பச்சை நிலக்கடலை- ஒரு கப் பெரிய வெங்காயம்- 2

பச்சை மிளகாய் -4 

கடுகு -அரை டீஸ்பூன் 

மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன் 

எண்ணெய்

உப்பு 


முதலில் பச்சை நிலக்கடலையை கழுவி குக்கரில் போட்டு, அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும். இதன் பின்னர் அடுப்பில் வாணலி காய்ந்ததும் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். இதன் பின்னர் வேக வைத்த நிலக்கடலையை போட்டு நன்றாக கிளறி இறக்கும்போது கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.


வெற்றிலை பாயாசம்: 




வழக்கமாக இளநீர் பாயாசம், சேமியா பாயாசம் என்று தான் பெரும்பாலும் சாப்பிடுவோம்.. ஒரு வித்தியாசத்திற்கு வெற்றிலை பாயாசம் போட்டுள்ளார் விஜய். இதுவும் செம டேஸ்ட்டியான ஐட்டம்தான்.


பால்- அரை லிட்டர் 

சேமியா- ஒரு கப் 

குல்கந்து- ஒரு டீஸ்பூன்

சோம்பு -அரை டீஸ்பூன்

ஏலக்காய்-2 

வெற்றிலை-2

சர்க்கரை- தேவையான அளவு


முதலில் அடுப்பில் கடாயை வைத்து பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் காய்ந்ததும் சேமியாவை போட்டு வேக வைக்க வேண்டும். மறுபுறம் மிக்ஸியில்  குல்க்கந்து, சோம்பு ஏலக்காய், வெற்றிலை (மேலே உள்ள காம்பை நீக்க வேண்டும்), போட்டு நைசாக அரைக்க வேண்டும். இதன் பின்னர் சேமியா வெந்ததும் சர்க்கரை போட வேண்டும்.


அரைத்த விழுதை வடிகட்டி கொண்டு பில்டர் செய்து, அந்தச் சாறை பாயாசத்தில் ஊற்ற வேண்டும். பின்னர் கொதி வந்ததும் இறக்க வேண்டும். இறக்கும் போது முந்திரி,  கிஸ்மிஸ் போன்றவற்றை துவி பரிமாறலாம்.


விஜய் வைத்த விருந்தில் சிலவற்றை உங்களுக்கு நாங்க ரெசிப்பியாவே சொல்லிட்டோம்.. செஞ்சு பாருங்க.. சாப்பிட்டுட்டு என்ஜாய் பண்ணுங்க!

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்