விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அதிகாலை விக்கிரவாண்டி, வி சாலை கிராமத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களால் அத்தனை அரசியல் கட்சிகளும் ஆச்சரியம் அடைந்துள்ளனவாம்.
சாதாரணா கால்கோள் விழாவுக்கே இவ்வளவு கூட்டம்னா. மாநாட்டுக்கு எத்தனை லட்சம் பேர் வருவார்களோ என்பதுதான் அவர்களது மிரட்சிக்குக் காரணம்.
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைத்து வரும் நடிகர் விஜய் சொன்னதை சாதித்து காட்டி வருகிறார். அதாவது விஜய் நற்பணி மன்றம் என்ற இயக்கத்தை மாற்றி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தொடங்கினார். இதனை ரசிகர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், விஜய் ஆதரவாளர்கள் என பலரும் வரவேற்றனர். அப்போது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு அதனால் தான் கமிட்டான படங்களில் நடித்த முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக களம் காண இருக்கிறேன் என அறிவித்திருந்தார்.
இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அதை விட வேற லெவல் களத்துக்கு அவர் வருவதால், ரசிகர்களும் தொண்டர்களாக மாறி கலக்க காத்துள்ளனர். கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார் விஜய். சமீபத்தில் தான் தமிழக வெற்றி கழகத்தின் கொடியையும் இக் கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார். இது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெறும் முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை குறித்தும், கட்சி சின்னத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும் விளக்கப்படும் என கூறியிருந்தார்.
இதனால் மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் அனைத்து கட்சியினரிடையே வலுத்த எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.அதே சமயத்தில் கொடி குறித்து பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பின. இதனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் இதனை சட்டரீதியாக எப்படி கையாள போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வந்தது.
இதற்கிடையே தவெக முதல் மாநாடு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சித் தலைமை அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான பணிகளை கட்சி தலைவர் விஜய் விறுவிறுப்பாக செய்து வருகிறார். அத்துடன் கட்சிக்கு ஒருபோதும் எவ்வித களங்கமும் ஏற்பட கூடாது என்ற கவனத்துடன் மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்டிப்பாக மது அருந்தி வரக்கூடாது. போலீஸ் அதிகாரிகளை மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். மேலும் மாநாட்டில் கலந்துகொள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வரும் தொண்டர்களை பாதுகாப்புடன் அழைத்து வந்து மீண்டும் அழைத்துச் செல்ல தக்க ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதற்கான சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில் தவெக முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று அதிகாலை சிறப்பாக நடந்து முடிந்தது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பந்தக்கால் நாட்டினார். இதில் கோவில், சர்ச், பள்ளிவாசல், போன்ற புனித தளங்களில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட புனித நீரும் ஊற்றப்பட்டது. இந்தப் பந்தக்கால் நடுவிழா மினி மாநாடு போல நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் உற்சாகமாக கலந்து கொண்டதால் அதிகாலையே அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது. இந்த பந்தக்கால் நடுவிழாவிற்கே இந்தக் கூட்டம் என்றால் இனி மாநாட்டிற்கு எவ்வளவு கூட்டம் வருமோ என அனைவரும் பிரமிப்புடன் வியந்தனர்.
இந்த பந்தக்கால் விழாவை தொடர்ந்து கட்சி தலைவர் விஜய், நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. இன்னும் அது சரியாக சொல்ல வேண்டுமானால் இது நம்முடைய கொள்கை திருவிழா. அதுவும் வெற்றி கொள்கை திருவிழா வி சாலை என்னும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் வெற்றி நிச்சயம் என தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் பணிகளை விரைவுபடுத்தவும் அக்கட்சித் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
{{comments.comment}}