Tvk மாநாடு 2024 .. மாநாட்டுக்கு வரும் தவெகவினர் பசியாற.. ரெடியாகும் ஸ்நாக்ஸ்.. என்னென்ன தெரியுமா?

Oct 26, 2024,04:58 PM IST

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருபவர்கள் கொடுப்பதற்காக பிஸ்கட், மிக்சர், தண்ணீர் பாட்டில்கள் கொண்ட ஸ்நாக்ஸ் பை தயாரித்து ரெடியாக வைக்கப்பட்டுள்ளது. 


தமிழகமே எதிர் பார்த்து காத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள  வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநாட்டு திடலில் பொதுமக்கள் அமர 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தடுக்க 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரங்கிலும், எல்இடி டிவி, 2 குடிநீர் டேங்குகளில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




தற்போது அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட் 1, மிக்சர் பாக்கெட் 2 மற்றும் குட்டி தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை ஒரு கேரி பேக்கில் போட்டு கையில் கொடுக்கவுள்ளனர். இதற்காக மதுரையில் இருந்து 8 லட்சத்திற்கும் அதிகமாக தின்பண்டங்கள் பேக் செய்யப்பட்டு விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இதை பேக் செய்துள்ளன்ர. கூடுதலாக தேவைப்பட்டால் தருவதற்காக விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலும் பேக் செய்யும் பணிகள் நடந்து வருகின்றனவாம்.


மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் கேட்கும் அனைவருக்கும் கொடுக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. யாரும் பசியுடன் போகக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளாராம்.  கட்சி சார்பில் தரப்படும் ஸ்நாக்ஸ் தவிர, மாவட்ட கட்சி நிர்வாகங்கள் சார்பிலும் பாக்கெட் போட்டு ஸ்நாக்ஸ் தர ஏற்பாடு செய்துள்ளனராம். பகலில் வெயில் அதிகம் இருப்பதால் பலர் தொண்டர்களுக்கு இலவசமாக தொப்பி தரவும் ஏற்பாடு செய்துள்ளனராம்.




மேலும், மாநாட்டிற்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு வர வேண்டாம் என தலைமை அறிவுறுத்தி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அது தொடர்பாக கூறப்படுகையில், தொண்டர்கள், பொதுமக்களை பேருந்துகளில் அழைத்து வரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் யாரும் வரும் வழியில் டாஸ்மாக்கில் வாகனங்களை நிறுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்