விழுப்புரம்: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் தொண்டர்கள் அனைவரும் வி. சாலையை நோக்கி படையெடுக்கத் துவங்கி விட்டனர். பஸ்கள், கார்கள், வேன்கள் என விதம் விதமான வாகனங்கள் விக்கிரவாண்டி நோக்கி கிளம்பத் தொடங்கியுள்ளனர்.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியமான அத்தியாயம் நாளை தொடங்குகிறது. அதாவது தவெகவின் முதல் மாநாடு நாளை மாலை 4 மணி அளவில் விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே வி சாலை கிராமத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பச்சைக் கம்பளம் விரித்த மாநாடு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலக முகப்பு: இந்த மாநாட்டு திடல் முகப்பில் தலைமைச் செயலகம் வடிவில் அமைத்து, அதன் மேல் காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் ஆகிய தலைவர்களுக்கு மத்தியில் விஜயின் பிரம்மாண்ட கட்டவுட் இடம்பெற்றுள்ளன. இந்த மாநாட்டை விஜய் தலைமையேற்று கட்சியின் பிரகடனம் குறித்து விளக்கமாக பேச இருக்கிறார். இந்த மாநாட்டுப் பணிகள் இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரசிகர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், என பெருமளவில் ஒன்றுகூட தயாராகி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ரசிகர்கள் ஐ அம் வெயிட்டிங் என சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
லட்சக்கணக்கான தொண்டர்கள்: இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் அலைகடலென தொண்டர்கள் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னேற்பாடாக தவெக தலைவர் விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி மாநாட்டை சுற்றி 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பத்தாயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிரமிக்க வைக்கும் ஏற்பாடுகள்: மாநாட்டுக்காக வரலாறு காணாத வகையில் பல்வேறு ஏற்பாடுகளை தவெக செய்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் யாராவது காணாமல் போனால் அவர்களை அணுக மிஸ்ஸிங் ஜோன் உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவ குழு,கண்காணிப்பு குழு, ஆம்புலன்ஸ் குழுக்கள் தனித்தனியாக அமைத்து ஒவ்வொருவரையும் எளிதில் கண்டறிய ஒரு நிறத்தில் சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்புக் கருதி விஜய் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இந்த ஏற்பாடுகள் முழுவதும் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
விஜய் கோரிக்கை: இதற்கிடையே பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம். மாநாட்டு பயண பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் பயணத்தை தவிருங்கள்.உங்கள் பாதுகாப்பை கருதியே சொல்கிறேன் என விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளம்பியது தொண்டர் படை: இந்த நிலையில் நாளை மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும், தொலைதூரத்தில் இருக்கும் தொண்டர்கள் இன்று இரவு முதல் வேன், பஸ், கார், மூலம் மாநாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளனர். பலர் இன்றே கிளம்பி விட்டனர். வழியெங்கும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வது போல சென்று சுற்றிப் பார்த்து விட்டு நாளை விக்கிரவாண்டி வந்து சேரவுள்ளனர்.
அதேபோல இன்று இரவு புறப்பட்டால் நாளை மதியம் மாநாட்டிற்கு வர ஏதுவாக இருக்கும் என்பது போலவும் பலர் திட்டமிட்டு கிளம்புகிறார்கள். அதனால் ரசிகர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என மக்கள் குவியப் போகிறார்கள். தொண்டர்கள் வர தயாராகும் பஸ்களின் முகப்பில் விஜய் போட்டோ இடம் பெற்ற பேனர்கள் கட்டி, பஸ் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: மாநாட்டு பாதுகாப்பிற்கு போலீசாரும் வர ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. அவர்கள் சாரை சாரையாக விக்கிரவாண்டி வந்து கொண்டுள்ளனர்.
திரையுலகிலிருந்து, நடிகர் சௌந்தர்ராஜா மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற அறக்கட்டளை சார்பில் சென்னையிலிருந்து சைக்கிள் பேரணியுடன் மாநாட்டில் கலந்து கொள்ள கிளம்பி விட்டார். நாளை காலை முதல் உள்ளூர் மக்களும் மாநாட்டிற்கு வர ஆரம்பிப்பார்கள். ஏற்கனவே வி. சாலை பகுதி முழுக்க திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. நாளை இது இன்னும் பிரமாண்டமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு நடைபெறவுள்ள பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வருவதால் இன்று இரவு முதலே அந்த சாலை போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக நாளை காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே நாளை இந்த சாலை வழியாக பயணம் செய்பவர்கள் அருகாமையில் உள்ள மாற்றுப் பாதைகளை பயன்படுத்துவது நல்லது.
நாளை காலை முதல் வி.சாலை மாநாடு திடல் திருவிழா கோலம் பூண்டு காணப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உற்சாகமும் ஆர்வமும் சுற்றுவட்டார மக்களிடம் இருந்து இப்போதே வர ஆரம்பித்து விட்டது. இது தவிர மாநாட்டிற்கு வர மனமிருந்தும் வர முடியாத பலர் குறிப்பாக பெண்கள், முதியவர்கள், டிவி மற்றும் யூடியூப்களில் இதை கண்டு ரசிக்க இப்போதே ஆர்வமாக காத்திருக்கிறார்களாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}