சென்னை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அஞ்சலி செலுத்திய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அறிவார்ந்த சமத்துவ சமுதாயம் அமைக்க தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதி ஏற்போம் என பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக மூத்த நிர்வாகி கி.வீரமணி, திமுக எம் பி கனிமொழி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பெரியாரின் நினைவு தினத்தை போற்றும் வகையில் டிஜிட்டல் நூலகத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் பதிவிட்டு கூறியதாவது, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.
தனது கட்சி ஆரம்பித்த புதிதில் பெரியார் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார் விஜய் என்பது நினைவிருக்கலாம். தவெக கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக பெரியாரையும் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தவிர மற்ற அனைத்துக் கொள்கைகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று தனது கட்சி மாநாட்டில் விஜய் அறிவித்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
{{comments.comment}}