விஜய் விசிட் அடித்த முதல் தலைவர்.. பெரியார்.. திரும்பிப் பார்த்த திராவிடக் கட்சிகள்!

Sep 17, 2024,08:28 PM IST

சென்னை:தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இது பல செய்திகளை பாஸ் செய்த வண்ணம் உள்ளதால் தமிழ்நாட்டுக் கட்சிகள் விஜய்யை திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளன.


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, அதற்கான உட்கட்டமைப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடலை வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் தொண்டர்கள் என அனைவரும் பலத்த வரவேற்பை அளித்தனர். 




இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  அக்கட்சியின் முதல் மாநாடு தள்ளிப் போனது. இதனையடுத்து தவெகவின் முதல் மாநாடு வரும் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்காக விஜய் ஆதரவாளர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். 


இதற்கிடையே நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து இதுவரை ஆறு மாதம் ஆகிவிட்டது. இக்கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக ஒரு தலைவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர்தான் தந்தை பெரியார். தந்தை பெரியார் சமூக சீர்திருத்தவாதியாக செயல்பட்டவர். நல்ல சிந்தனையாளர். அதேபோல் சமூக நீதி, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, இறை நம்பிக்கையின்மை, சாதி எதிர்ப்பு, பெண்கள் முன்னேற்றம், கல்வி போன்ற  கொள்கைகளை வலியுறுத்தியவர். 


தமிழ்நாடு இன்றளவும் பெரியார் மண் என்று சொல்லப்பட பெரியாரின் சீரிய சிந்தனைகளும், அதை திராவிடக் கட்சிகள் எடுத்துச் சென்ற விதமும்தான் காரணம். தி.கவிலிருந்து பிரிந்த திமுகவும் சரி, அதிலிருந்து பிரிந்த அதிமுகவும் சரி, இரு பெரும் திராவிடக் கட்சிகளாக பெரியாரின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்துள்ளன. இப்படியாக பல்வேறு சிறப்புகளால் போற்றப்படும் ஒரு சிறந்த தலைவரான பெரியாருக்கு தனது முதல் மரியாதையை செலுத்தி உள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். விஜயின் இந்த செயல் தமிழ்நாடு முழுவதும் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.


பெரியாருக்கு முதல் அஞ்சலி செலுத்தியதன் காரணமாக விஜயும் பெரியாரின் பாதையில் தான் நடக்கப் போகிறார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது. அதேபோல் இன்று பெரியார் பிறந்த நாளில்  வெளியிட்ட அறிக்கையிலும் கூட பெரியாரின் சமூக நீதிப் பாதையை பின்பற்ற உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார். விஜய் நடை போடப் போகும் அந்த பாதையானது பெரியாரின் கொள்கையை பின்பற்றும் பாதையாக இருக்கும் என்பதால் திராவிட கட்சிகளுக்கு இது மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதே நேரத்தில் வருங்காலத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கும் எனவும் நம்பிக்கை உருவாகியுள்ளது .


பெரியார் நினைவிடத்தில் இன்று விஜய் அஞ்சலி செலுத்த சென்றபோது பூக்களையும், மாலையையும் தானே சுமந்து சென்று அதை அஞ்சலி செலுத்தினார். முன்னதாக பெரியார் பிறந்த நாளையொட்டி விஜய் வெளியிட்ட அறிக்கையில், சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். 


சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்