சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடிகள் மூன்று காம்பினேஷனில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கோட் படத்தின் வெளியீட்டிற்கு பிறகே, கட்சி கொடி குறித்த அப்டேடுகள் வெளியிடப்படும் என அக்கட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பேராதரவை அளித்து வந்தனர். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி உள்ளிட்டவை குறித்த அப்டேட்டுகள் வெளியாகவில்லை.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலேயே தனது முழு நீள அரசியல் பிரவேசம் இருக்கும். அதற்கிடையே கமிட்டான படங்களை முடித்துவிட்டு அரசியலில் முழுமையாக களமிறங்க உள்ளதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு எங்கு நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதில் மதுரை, சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, போன்ற மாவட்டங்கள் இடம்பெற்றன. தற்போது தமிழ்நாட்டின் மையத்தில் திருச்சி அமைந்துள்ளதால் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் வர ஏதுவாக இருக்கும் என்ற காரணத்தால் முதல் மாநாட்டை நடத்த திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தேர்வு செய்யும் வேலை ரகசியமாக நடந்து வருகிறது. மூன்று கொடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கட்சிக்கு எந்த காம்பினேஷனில் கொடி தேர்வு செய்யப்படும் என்பது குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இறுதி முடிவெடுப்பார் என அக்கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகே அக்கட்சியின் கொடி மற்றும் மாநாடு தேதி குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியிடப்படும். அதுவரை தவெக தொடர்பாக எந்த அறிவிப்புகளும் வெளிவராது எனவும் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் கட்சி கொடி மற்றும் சின்னம் குறித்த எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
ஏனெனில் ஏற்கனவே வெளியிட்டுள்ள லெட்டர் பேடில் கரும்பச்சை மெரூன் மற்றும் நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தது. இதே காம்பினேஷனில் கட்சிக் கொடி வர அதிக வாய்ப்புள்ளதாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}