தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!

Mar 05, 2025,05:37 PM IST

சென்னை:தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடாகும் என அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.


திமுக தலைவர் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் மட்டும் பங்கு பெறவில்லை. அழைப்பு விடுக்கப்பட்ட மற்ற அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டு முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்துக் கட்சிகளும் முன்மொழிந்துள்ளன.


இந்த நிலையில் பல்வேறு கட்சிகள் அதன் நிலைப்பாடு குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கலந்து கொண்ட அக்கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இங்கிருக்கும் அனைவருக்கும் வணக்கம். 




தொகுதி மறுசீரமைப்பு செய்வது தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களை பெரும் பாதிப்பை உண்டாக்கும். இது ஒன்றிய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை கடைபிடிப்பதற்கான தண்டனையே அன்றி வேறில்லை. 


முன்னாள் பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் 42வது சட்ட திருத்தத்தின் மூலம் 1976 இல் இருந்து 2001 வரை தொகுதி மறு சீரமைப்பை நிறுத்தி வைத்தார். அதேபோல் 84 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் முன்னாள் பிரதமர் மாண்புமிகு வாஜ்பாய் அவர்கள் 2001 இல் இருந்து 2026 வரை மேலும் 25 ஆண்டுகளுக்கு இந்த மறுசீரமைப்பை நிறுத்தி வைத்தார். அப்போது அவர் சொன்ன காரணம் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தொகுதி மறுசீரமைப்பு செய்வது நியாயமாக இருக்காது என்பதே அந்த காரணம். இப்போதும் அப்படியே தான் இருக்கிறது. 


எனவே, தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடாகும் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனிநபரின் இமெயில், சமூக வலைதள கணக்குகளை அனுமதியின்றி அணுகலாம்.. வருமானத்துறைக்கு புது அதிகாரம்

news

லண்டன் கிளம்பினார் இசைஞானி இளையராஜா.. இது என்னுடைய பெருமை அல்ல.. நாட்டின் பெருமை‌.. என நெகிழ்ச்சி!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொகுதிகள் மறு வரையறையை 30 வருடத்திற்குத் தள்ளி வையுங்கள்.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

news

வெயில் காலங்களில்.. சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.. சூப்பராக வந்த ஹேப்பி நியூஸ்!

news

தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!

news

விகிதாச்சாரம் குறையக்கூடாது.. அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு இது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட தேவை எழுந்துள்ளது.. விசிக தலைவர் திருமாவளவன்..!

news

ஹலோ.. இன்னிக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க.. வெளில வெயிலைப் பார்த்தீங்கள்ள.. கவனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்