தவெக ஆட்சி அமைந்ததும்.. பெண்கள் பாதுகாப்பை 100% உறுதி செய்வோம்.. விஜய் உறுதி!

Mar 28, 2025,05:16 PM IST

சென்னை:  தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பு 100% உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கு ரொம்ப முறையாக ஸ்டிரிக்ட்டாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவமனை என்று அத்தனையிலும் ரொம்பவே கவனம் செலுத்துவோம். அதிலும் எல்லோருக்கும் ஈசியாக ஈக்குவலாக செய்வது தான் நம்ம டார்கெட் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் காலை 9 மணிக்கு தொடங்கியது. தவெகவின் முதல் கூட்டம் என்பதால் உறுப்பினர்களையும் நிர்வாகிகளையும் வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதேபோல் கட்சித் தலைவர் விஜயை வரவேற்க மேள தாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு, மேடையில் அமர்ந்தார் விஜய். இதனை தொடர்ந்து தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




பிறகு நன்றியுரை ஆற்ற வந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனக்கே உரிய பாணியில் ஜாலியாகவும், அதேசமயம், வார்த்தையில் சீறியும் பேசினார். இது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.  அவரது பேச்சு:


நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம். கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது. தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். இன்னைக்கு தமிழ்நாடு இருக்கிற சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லோரும் நிச்சயமாக புரிந்து வைத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அரசியல்னா என்னங்க. ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழனும் என்று நினைக்கிற அரசியலா, இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழனுங்கிறது அரசியலா நீங்களே சொல்லுங்க. எல்லோருக்கும் நல்லது நடக்கிறது தானே அரசியல். அதுதான் நம் அரசியலும். 


காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னர் ஆட்சி போன்று நடத்துகின்ற நம்மளுக்கு எதிராக இவர்கள் செய்கின்ற செயல் ஒன்றா இரண்டாங்க. மாநாட்டில் ஆரம்பித்து அதுக்கப்புறம் நான் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் விசிட், இரண்டாம் ஆண்டு துவக்க விழா  என்று அன்றைக்கெல்லாம் சிட்டிக்குள்ள எந்த ஹாலும், மண்டபமும் கொடுத்து விடக்கூடாது என்று மகாபலிபுரத்தில் கொண்டாடினோம். இன்றைக்கு பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் எப்படி எல்லாம் தடைகள் ‌. ஆனால் அத்தனை தடைகளையும் தாண்டி நம்முடைய தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது தொடர்ந்து நடக்கும். 


எல்லோரும் போட்டு அடி அடின்னு அடிக்கிறாங்க




நம்முடைய தோழர்கள் அர்ஜுன் பிரதர், நிர்மல் குமார் பிரதர், நம்ம ரமேஷ் பிரதர் இவங்க எல்லாத்தையும் போட்டு அடி அடின்னு அடிக்கிறாங்க. நாமளும் அதே மாதிரி அடிக்கணுமா என்று மனசுக்குள்ள ஒரே யோசனையாகத்தான் இருக்கிறது என்று கூறிய உடனே (தொண்டர்கள் கரகோஷத்தில் கத்த விஜயோ ஓகே புரிந்து விட்டது என சிரித்தபடி தொடர்ந்தார்)


மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே..  பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது அவர்களே.. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே.. ஒன்றியத்தில் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என அறிவிப்புகள் அறிவித்துவிட்டு இங்கு நீங்கள் பண்ற ஆட்சி மட்டும் என்னவாம்.


அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சி தானே. ஒரு கட்சித் தலைவனா ஜனநாயக முறைப்படி என் கழகத் தோழர்களையும் எந்நாட்டு மக்களையும் பார்க்க சந்திக்க தடை விதிக்கிறதுக்கு நீங்க யாருங்க. தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டேனா பார்த்தே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் அமைதியாக இருக்கிறேன். நேத்து வந்தவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என கனவு காண்கிறானு சொல்றீங்க. அது நடக்கவே நடக்காதுன்னும் சொல்றீங்க. அப்படி எந்த கட்சிக்கும் கொடுக்காத நெருக்கடியை ஏன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். 


புயலாக மாறுவேன்




அணையை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம். ஆனால் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் சாதாரணமான காத்து சூறாவளியாக மாறும். ஏன் சக்தி மிக்க புயலாக கூட மாறும். எனது அருமை தமிழக வெற்றிகழகத் தோழர்களே நான் மாநாட்டில் ஒரு விஷயத்தை ரொம்ப வலியுறுத்தி சொன்னேன். அதை இங்கே நான் திரும்பவும் ரிப்பீட் பண்றேன். இந்த மண் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண். சமூக நல்லினத்தை பேணும் சமூக நீதிக்கான மண். இதை நாம் பாதுகாத்தே தீர வேண்டும் உங்களை வேண்டி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 


தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்து வர செய்திகள் எல்லாம் கேட்கும்போது மன உளைச்சலும், வேதனையும், தரக்கூடியதாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு என்று, ஒன்று இருக்கிறதாகவே தெரியவில்லை. அதற்கெல்லாம் இந்த கரப்ஷன், கபடதாரிகள் எல்லாம் தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும். அதற்கு இருக்கின்ற ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலரனும். அது வரவேண்டும் என்றால், இவர்களை மாற்ற வேண்டும். அதற்கு என்ன வழி. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். நம்முடைய தோழர்கள் தினமும் மக்களை போய் பாருங்கள். அவங்களோட பேசுங்க. ஒவ்வொருத்தெருவுக்கும் போங்க‌. ஒவ்வொரு வீட்டுக்கும் போங்க. அவர்களின் பிரச்சினைகள் என்ன என்று கேளுங்கள். அதனை தீர்ப்பதற்கு என்ன வழி என்று யோசியுங்கள். அப்பதான் அவர்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும். அப்படி ஆழமான நம்பிக்கையை விதைத்து விட்டு அதற்கு அப்புறமாக நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரட்டைப் போர் யானை, வாகை மலர்க்கொடி தானா பறக்கும். 


ஏன் சார் கோபம் வருது




மாண்புமிகு மன்னர் ஆட்சி முதல்வர் அவர்களே.. உங்க ஆட்சியை பற்றி மட்டும் கேள்வி கேட்டா ஏன் சார் உங்களுக்கு கோபம் வருகிறது. நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்தி நடத்தி இருந்தீர்கள் என்றால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பச்ச பிள்ளைகள் படிக்கிற பிள்ளைகள், சின்ன பொண்ணுங்க, வீட்ல இருக்க பொண்ணுங்க, வேலைக்கு போற பொண்ணுங்க, என இவர்கள் எல்லாத்துக்கும் நடக்கின்ற கொடுமைகளை சொல்ல முடியல சார். இதுல வேற உங்களை அப்பானு கூப்பிடுறீங்கன்னு சொல்றீங்க. 


தினமும் இந்த கொடுமைகளை அனுவித்துக் கொண்டிருக்கிற மக்கள் தான் உங்கள் அரசியலுக்கு ஒரு தீர்வு கட்ட போகிறார்கள். உங்களுடைய ஆட்சிக்கே முடிவு கட்டப் போகிறார்கள். உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டப் போகிறார்கள். சரி பெண்களோட லைப் தான் இப்படி போராட்டமாக இருக்கு என்று பார்த்தால் இங்கே எத்தனை போராட்டங்கள். பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், போதைப்பொருட்கள் எதிர்ப்பு போராட்டம், வரி உயர்வு போராட்டம், மீனவர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம், samsung தொழிலாளர்கள், டங்ஸ்டன் விவசாயிகள் போராட்டம், மின் கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம், இஸ்லாமிய அமைப்புகள், செவிலியர்கள், மருத்துவர்கள், என்று இப்படி போராட்டங்கள். இதெல்லாம் சும்மா சாம்பிள் தான். இப்படியே சொல்லிக்கிட்டே போகலாம். ஆனால் இந்த நாள் பத்தாது. 


இது போன்ற எல்லா போராட்டங்களுக்கும் தமிழக வெற்றிக்கழகம் கூடவே நிற்கும். இங்க நீங்க தான் இப்படி என்றால், அங்கு அவங்க யாரோ உங்க சீக்ரெட் ஓனர். அவங்க உங்களுக்கும் மேலே மாண்புமிகு திரு மோடிஜி அவர்களே.. என்னமோ உங்களுடைய பெயர் எல்லாம் சொல்வதற்கு எங்களுக்கு பெரிய பயம் மாதிரியும், அப்படி ஒரு விஷயத்தை சொல்லுவதற்கு, பெயரை  சொல்லணும்ன்றது. சத்தியமாக அப்படித்தாங்க இருக்கு.


ஏன் ஜி அலர்ஜி!




மத்தியில ஆள்றவுங்கன்னு சொல்றோம். மத்தியில யார் ஆள்றா காங்கிரஸா.. இங்க ஸ்டேட்ல ஆள்றவங்கன்னு பேசுறோம்.. யார் அதிமுக வா. அப்புறம் என்ன பேர சொல்லணும் பெயரை சொல்லணும் என்று எனக்கு புரியவில்லையே. நீங்க தானே கேட்டீங்க. இந்தா வச்சுக்கோங்க. ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி, கொள்ளை அடிப்பதற்காக உங்களுடைய பாஜகாவோட மறைமுக அரசியல் கூட்டணி. இப்படி உங்க பெயரை சொல்லியே மக்களை ஏமாற்றுவதும் உங்க பேரை சொல்லியே மக்களை பயமுறுத்துவதும் இப்படி கரெப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்கள் அரசுக்கு ஏன் ஜி.. தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி.. தமிழ்நாட்டுல வர ஜிஎஸ்டி மட்டும் கரெக்டா வாங்கிக்கிறீங்க‌.. ஆனா தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டிற்கு மட்டும் நிதி ஒதுக்க மாட்டீங்கிறீங்க.


இங்க படிக்க வேண்டிய நம்ம பிள்ளைகளுக்கு படிக்க நிதி ஒதுக்க மாட்டேங்கிறீங்க. மும் மொழிக் கொள்கையை திணிக்கிறீங்க. டி லிமிடேஷன் என்ற பெயரில் தமிழ்நாட்டினுடைய பார்லிமென்ட் சீட்டிலையும் கையை வைக்க பார்க்கிறீங்க. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஸ்டார்ட் பண்ணும் போதே புரிந்து விட்டது பிரதமர் சார் உங்க பிளான் என்ன என்று. எங்கெல்லாம் எப்படி எல்லாம் எந்த திசைகள் எல்லாம் இந்த நாட்டை கொண்டு போலாம் என்று.


சார் உங்க கிட்ட நாங்கள் சொல்லிக்க வேண்டியது என்னவென்றால் தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா கேண்டில் பண்ணுங்க சார். ஏன்னா தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டின ஸ்டேட் சார் பாத்து செய்யுங்க சார். மறந்திடாதீங்க சார். 


தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த பொதுக்குழு வழியாக ஒரு உத்திரவாதத்தை நாம கொடுக்கப் போகிறோம். நம்ம ஆட்சி அதாவது உங்கள் ஆட்சி உண்மையான மக்களாட்சி தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அருதி பெரும்பான்மை பெற்ற ஆட்சி. அதே சமயத்தில் அதிகார பகிர்வு கூடிய ஆட்சி. அப்படி இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பு 100% உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கு ரொம்ப முறையாக ஸ்டிர்ட்டாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவமனை என்று அத்தனையிலும் ரொம்பவே கவனம் செலுத்துவோம். அதிலும் எல்லோருக்கும் ஈசியாக ஈக்குவலாக செய்கிறது தான் நம்ம டார்கெட். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், என தொழிலாளர்கள்  பக்கமும் நாங்கள் கண்டிப்பாக துணையாக நிற்போம். 


எல்லா மக்களுக்குமான அரசாக இருக்கும்




ஏன்னா நாம எப்பவுமே உழைக்கின்ற வர்க்கத்தினர் பக்கம்தான். நம்மளுடைய தமிழ்நாடு  விவசாய பூமி இயற்கை விளைந்த மண் இந்த விவசாயத்திற்கும் இயற்கைக்கும் எதிராக எந்த விதமான திட்டத்தையும் நடவடிக்கையும் கொண்டு வரதை எங்களால் ஏற்கவே முடியாது. எங்கள் மண், மக்களை பாதுகாப்பாக பாதிக்ககூடிய திட்டங்களை தயவு செய்து செயல்படுத்தாதீர்கள். அதை நாங்கள் எதிர்க்கவே செய்வோம். தமிழ்நாடு எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை கடமை கொள்கை எல்லாமே. the fundamental strength of politics is uncompromising principles and ideologies.. Periyar is social justice.. kamarajar honest administration.. Ambedkar equal justice and equal opportunity .. Velu nachiyar social and communal harmony.. Anjalai Ammal fighting for water resources.. where the reasons for choosing them as a party ideologist and policy leaders i like to mention here with Pride that we are first political party to declared the historic women icons, Who are India's freedom fighters from Tamilnadu as a party ideologist policy leaders. இப்படி ஒரு ஆழமான நம்பிக்கையுடன், வரும் 2026 இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் சக்தியின் உதவியுடன் மக்கள் விரும்புகிற நல்ல அரசியலை அமைப்பதில் உறுதியாக இருப்பதால், அதை தடுப்பதற்கு சில பேர் பகல் கனவு காண்பார்கள் இல்லையா. அவர்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். 


காற்று மழை, வெயில், இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும். யாராலும் தடுக்க முடியாது. இதையெல்லாம் கடவுளால் உருவாக்கப்பட்டவை. அப்படித்தான் எம் மக்களுக்கான அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது. அரசியல் சூறாவளியையும் தேர்தல் சுனாமியையும் தடுப்பார் எவர்.அப்படி என்றால் எம் மக்களுக்கான அரசியலை வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க வேண்டும் என்று நினைக்கிறவங்களுடைய கனவு ஒரு நாளும் மெய் படாது. ஞாலம் கைதினும் கைகூடும் காலம் கருதினும் இடத்தால் செய்யின்.. ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலை செய்தால் மூவுலகத்தையும் முழுமையாக வேண்டினாலும் அது கைவசப்படும். இந்த திருக்குறள் உடன் என் நன்றியை நிறைவு செய்கிறேன். 


பார்த்துக்கிட்டே இருங்க அடுத்த வருஷம் இதுவரைக்கும் தமிழ்நாடு சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே. ஒன்னு டிவிகே இன்னொன்னு டி எம் கே.. கான்ஃபிடன்ட்டா இருங்க நல்லதே நடக்கும்.வெற்றி நிச்சயம்.மீண்டும் சந்திக்கும் வரை நன்றி நன்றி வணக்கம் எனக்கூறி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தோனி கடைசி ஓவர்களில் களம் இறங்குவது ஏன் தெரியுமா?.. பிளமிங் சொல்லும் காரணம் இதுதான்!

news

எட்டயபுரத்தில்.. கர்நாடக சங்கீத மேதை முத்துசுவாமி தீட்சிதரின்.. 250 வது ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

news

கிப்லி டிரெண்டில் கை கோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.. அசத்தல் புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சி!

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 67,000த்தை கடந்தது!

news

ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு.. இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து..!

news

Attn passengers: ஏப்ரல் 1 முதல் 30 வரை.. தென்காசி டூ செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து..!

news

ரமலான்.. இஸ்லாமியர்களின் பெரு நாள், புனித நாள்.. சமூக நல்லிணக்கத்தின் திருநாள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 31, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

விடாமல் துரத்திய ஜடேஜா, தோனி.. கடைசி வரை போராடித் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்