சென்னை: எந்த கட்சியிலும் இல்லாத அளவிற்கு தவெகவில் சிறார் அணி, இளம் பெண்கள் அணி, பெண்கள் அணி, திருநங்கைகள் அணி உட்பட 28 அணிகளை உருவாக்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கட்சி தொடங்கிய விஜய் 2025 பிப்ரவரி 2ம் தேதி முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடினார். இதற்காக அக்கட்சி நிர்வாகிகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அதே சமயத்தில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டு, சிலைகளையும் தவெக தலைவர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதி திறந்து வைத்தார்.
தற்போது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி கட்சிப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். கட்சி தொடங்கி ஒராண்டு ஆகியுள்ள நிலையில், சமீபத்தில் தான் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து அறிவித்துள்ளார். முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியான அறையில் ஆலோசனை நடத்தி, கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை நம்பித்தான் தவெகவை தொடங்கியுள்ளதாகவும், கட்சி வளா்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், நிர்வாக வசதிக்காக சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அண்மையில் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில், எந்த கட்சியிலும் இல்லாத வகையில், பெண்கள் அணி, இளம்பெண்கள் அணி, சிறார்கள் அணிகளை உருவாக்கியுள்ளார் தவெக தலைவர் விஜய். இவை தவிர தவெகவில் 3ம் பாலினத்தவர் மாற்றுத்திறனாளிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணிகளும் உள்ளன. ஆக மொத்தத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தம் 28 அணிகளை விஜய் உருவாக்கியுள்ளார். அதில், ஒன்பது அணிகள் குறித்த விபரத்தை வெளியிட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட 9 அணிகளுக்கும் விரைவில் நிர்வாகிகளும் நியமிக்கப்பட உள்ளனர்.
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
மன ரீதியிலான பிரச்சனை... விரைவில் மீண்டு வருவேன்... நடிகை நஸ்ரியா!
இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு: நயினார் நகேந்திரன்!
இன்ஸ்டா ரீல்ஸால் மகள் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..வைரலாகும் வீடியோ..!
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை... பாஜக தேசிய தலைமை விளக்கம்!
வெயிலுக்கு இதமான குல்பி.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம்...எதிர்க்கட்சிகள் கண்டனம்!
{{comments.comment}}