TVK Flag: 5 வருடத்திற்கு பட்டொளி வீசிப் பறக்கப் போகும்.. விக்கிரவாண்டியில் ஏற்றப்படும் தவெக கொடி!

Oct 25, 2024,04:41 PM IST

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் ஏற்றி வைக்கும் கொடி ஐந்து ஆண்டுகள் அங்கேயே இருக்கும் வகையில்  திட்டமிட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் தற்போது வரை கலக்கி கொண்டிருக்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சி ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை ரசிகர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என பலரும்  ஆதரவளித்து வருகின்றனர். இதனால் விஜயோ கட்சி சம்பந்தப்பட்ட பணிகளை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.


இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இரண்டு யானைகளுக்கு மத்தியில் வாகைமலர் இடம் பெற்ற கட்சிக் கொடியையும்,கொடி பாடலையும் அறிமுகம் செய்தார். இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலாகி பலதரப்பு மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 




இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது.இதற்கான  பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு துவங்க இருக்கிறது. அப்போது தவெகவின் கட்சி பிரகடனம், கொடி குறித்த விளக்கம் போன்றவை தொடர்பாக விஜய் பேச இருப்பதால் இதனை கேட்க விஜய் ரசிகர்கள் தொண்டர்கள், மற்ற அரசியல், தலைவர்கள், திரையுலகினர், என பலரும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.


700 க்கும் மேற்பட்ட சிசிடிவி: இந்த மாநாட்டிற்காக வர இருக்கும் ரசிகர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநாடு திடல் சுற்றி 700 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


பிரம்மாண்ட திடல்: இது தவிர 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திடலில் 50000 பேர் அமரும் வகையில் இருக்கைகள், பார்க்கிங் வசதி, வாகன நிறுத்தம், மின்விளக்குகள், உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடு பணிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.தற்போது வரை 90 சதவீத வேலைகள் நிறைவடைந்தள்ளன. 


இது தவிர மருத்துவம் தீயணைப்புத்துறை என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாடு நடைபெறும் முகப்பு வாயிலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு மத்தியில் விஜய்யின் மிகப்பெரிய கட்அவுட் இடம்பெற்றுள்ளன.


மேலும் மாநாட்டு பணிகள் குறித்து கடலூர் எஸ்பி ராஜாராம் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த மாநாட்டிற்காக பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என விஜயின் பெற்றோர் ஷோபா மற்றும் சந்திரசேகர்  நேற்று காலை சென்னை கொரட்டூரில் விஜய் கட்டியுள்ள சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். அப்போது தவெகவின் கொடியின் வண்ணத்தில் ஏலக்காய் மாலை சாய்பாபாவிற்கு அணிவிக்கப்பட்டது. அந்த மாலை மாநாடு நடக்கும் நேரத்தில் விஜய்க்கு அணிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மாநாடு நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மாநாடு பணிகளை தமிழகமே திரும்பிப் பார்த்து வருகிறது. இந்த நிலையில் மாநாடு  வாயிலில் இருந்து மாநாடு திடல் வரைக்கும் இருபுறமும் 35 அடிகள் கொண்ட ஏராளமான கொடிக்கம்பங்கள் நடப்பட்டு அதற்கு மேலே 15 அடியில் உயரத்தில் தவெகவின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. 


 100அடி உயர கொடிக்கம்பத்தில்: மாநாட்டு திடலில் 100அடி உயர கொடிக்கம்பத்தில் தவெக கொடியை ரிமோட் மூலமாக ஏற்றி வைக்கிறார் அக்கட்சித் தலைவர் விஜய். 100 அடி உயரத்தில் இந்த கொடியை ஏற்றுவதால் சுற்று வட்டார பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் இந்த கொடியை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்தக் கொடி 20 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கொடிக்கம்பத்தின் உச்சியில் இடிதாங்கி பொருத்தப்பட்டு அக்கம்பம் துருப்பிடிக்காமல் இருக்க வேதியல் முழாம் பூசப்பட்டுள்ளதாம்.


விஜய் ஏற்றி வைக்கும் இந்த கொடி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதே இடத்தில் பறக்க நில உரிமையாளர் மணியிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக நில உரிமையாளருக்கு 50,000 முன் பணம் மற்றும் மாதம் 5000 வாடகை என ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாம்.


இப்படி மாநாடு பணிகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வேளையில் மாநாடு பணிகளை பார்வையிட ரசிகர்கள் சென்று செல்பி எடுத்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்