விழுப்புரம் : சினிமா பஞ்ச் டையலாக் இல்லாமல், வழக்கமான அரசியல் மாநாடு போல் யாரையும் தாக்கி பேசாமல், அநாகரீகமான விமர்சனம் வைக்காமல், யாரையும் குறை கூறாமல்.. நான் என்ன பண்ணப் போறேன், நாங்க என்ன பண்ணப் போறோம் என்பதை சிம்பிளாக, அதேசமயம், அதிரடியாக அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தி தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டிலேயே யதார்த்தமாக பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார் விஜய்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த அரசியல் மாநாட்டில் வழக்கமான அரசியல் மாநாடு போல் அதிகமானவர்கள் மேடையில் அமர்வது, நிறைய பேர் பெரிய பெயர் பட்டியல் வாசித்து, பேசிக் கொண்டே இருப்பது போன்ற எதுவும் இந்த மாநாட்டில் இல்லை.
குறிப்பாக வட்டச் செயலாளர் வண்டு முருகன் அவர்களே சதுரச் செயலாளர் சந்து முருகன் அவர்களே என்றெல்லாம் நீட்டி முழக்காமல் சிம்பிளாக விஜய் உடன் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டுமே மேடையில் இருந்தார்கள். மற்ற நிர்வாகிகள் கூட மேடையின் ஒரு பகுதியில் ஓரமாகத் தான் அமர வைக்கப்பட்டிருந்தனர். இதை விஜய்யே கூட தனது பேச்சின்போது கலாய்த்துக் கூறி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
மேடைக்கு வந்ததும் விஜய் நடத்திய ரேம்ப் வாக் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தது. இது விஜய் தன்னுடைய சினிமா செல்வாக்கையும், புகழையும், மாஸ் காட்ட இந்த மாநாட்டை நடத்துகிறார் என பலருக்கும் சாதாரணமாக தோன்றியது. ஆனால் அவரது பேச்சு அதிரிபுதிரியாக இருந்தது. வளவள கொழகொழ என இழுக்காமல், தொண்டர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் மாநாடு துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே விஜய் பேச துவங்கினார். கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கிய உடனேயே விஜய் பேச துவங்கி விட்டார்.
வழக்கமாக விஜய் தன்னுடைய டிரேட் மார்க் டயலாக்கான, "என் நெஞ்சில் குடியிருக்கும்" என்று தான் தன்னுடைய முதல் அரசியல் உரையை துவக்குவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் நினைப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி, சென்டிமென்டாக ஒரு உதாரணத்தை சொல்லி, சிம்பிளாக தன்னுடைய ஸ்டாண்ட் இது தான் என காட்டும் வகையில் பேச்சை துவக்கினார் விஜய்.
விஜய் தன்னுடைய உரை முழுவதிலும் தன்னுடைய சினிமா பஞ்ச் டயலாக் எதையும் பயன்படுத்தவில்லை. யதார்த்தமாக, அதே சமயம் தான் எதற்காக அரசியல் வந்தேன், தன்னுடைய நிலைப்பாடு என்ன, நோக்கம் என்ன என்பதையும் தெளிவாக சொல்லி விட்டார். பெரியாரை தன்னுடைய அரசியல் கொள்கை வழிகாட்டியாக அறிவித்தாலும், கடவுள் மறுப்பு கொள்கையை கையில் எடுக்கப் போவதில்லை என்பதை தெளிவாக அறிவித்து விட்டார்.
தன்னுடைய அரசியல் பயணத்திற்கு தனது சினிமா வசனங்களைக் கூட அவர் பயன்படுத்த விரும்பவில்லை என்பதை தெளிவாக நிரூபித்து விட்டார் விஜய். தன்னுடைய அரசியல் எதிரி யார், யாரை தான் எதிர்க்க போகிறேன், தன்னை பற்றி வைக்கப்படும் அரசியல் விமர்சனங்கள் என அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக பதில் அளித்து விட்டார் விஜய்.
வழக்கமாக யாராவது புதிதாக அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக என்னென்ன விமர்சனங்கள் முன் வைக்கப்படும் என்பதை சரியாக பட்டியலிட்டு, அவற்றிற்கு ஓப்பனாக மேடையில் பதில் கூறி விட்டார் விஜய். மொத்தத்தில் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து துவம்சம் செய்துள்ளார் விஜய். பேச்சை முடிக்கும்போது நாங்க டீசன்ட்டான அரசியல் தான் செய்வோம்.. டீசன்ட்டாதான் தாக்குவோம்.. ஆனால் டீப்பா தாக்குவோம்.. எங்களுக்கு பயமெல்லாம் கிடையாது என்றும் சொல்லி பல தலைவர்களுடைய தூக்கத்துக்கு அணுகுண்டு வைத்து விட்டுச் சென்றார் விஜய்.
தவெக தலைவர் விஜய்யின் பேச்சு எப்படி இருந்தது?
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
{{comments.comment}}