ரிமோட் பட்டனை விஜய் அழுத்தியபோது.. இதை கவனிச்சீங்களா.. வலது கையில் என்ன காயம் ?

Oct 27, 2024,05:08 PM IST

விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கட்சி கொடியை ஏற்றி வைத்த நடிகரும், கட்சி தலைவருமான விஜய்யின் வலது  கையில் காயம் இருந்தது. விஜய் கையில் இருக்கும் காயத்திற்கு என்ன காரணம் என அனைவரும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.


விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் பெருந்திரளாக குவிந்த இந்த மாநாடு விஜய்க்கு பெரும் உணர்ச்சி பூர்வமாக அமைந்தது. கட்சி தொண்டர்களையும், அவர்கள் அளித்த வரவேற்பையும் பார்த்த விஜய் கண் கலங்கினார். அதற்கு பிறகு மாநாட்டு திடலின் மத்தியில் 101 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கட்சியின் கொடியை மேடையில் இருந்து பட்டனை அழுத்தி ஏற்றி வைத்தார் விஜய்.




தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பல்வேறு மீடியாக்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது தவிர மாநாட்டு திடலிலும் பல இடங்களில் எல்இடி திரைகள் அமைத்து மேடையில் நடப்பதை காண்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. கட்சியின் கொடியை ஏற்றுவதற்காக பட்டனை அழுத்திய விஜய்யின் கை க்ளோசபில் காட்டப்பட்டது. அப்போது அவரது கையில் நடு விரலின் மேற்பகுதியில் கருப்பு நிறத்தில் காயம் இருந்தது. கைகளில் சில இடங்களில் காயம் இருந்தது காட்டப்பட்டது. 


விஜய் கையில் என்ன காயம் உள்ளது என தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் பதறிப் போய் காரணம் கேட்க துவங்கி விட்டனர். ஆனால் விஜய் தற்போது டைரக்டர் ஹச்.விஜய் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க துவங்கி உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய்க்கு கையில் லேசாக காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்