தவெக ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டத்தை.. பிரம்மாண்டமாக நடத்த.. விஜய் உத்தரவு.. ரெடியாகும் ரசிகர்கள்

Feb 13, 2025,06:40 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அக்கட்சியின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த அக்கட்சி நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 



தமிழ் சினிமாவில் கோலுண்றிய நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை விறுவிறுப்பாக செய்து முடித்த விஜய் தற்போது மாவட்ட நிர்வாகிகளின் நியமனம் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார். மறுபக்கம் தமிழ் சினிமாவில் இறுதி அத்தியாயமான ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார். 


தமிழக வெற்றிக் கழக தொடங்கப்பட்டு, கடந்த வாரத்துடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைத்து கொள்கை தலைவர்களுடைய சிலையை திறந்து வைத்தார். அதேபோல் கட்சி ஓராண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த மாதம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். 




இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிரம்மாண்டமாக  நடத்த அக்கட்சித் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான பணிகளை செய்து முடிக்க  அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகிய மூவருக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


இந்த விழாவை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடத்த திட்டமிட்டு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அந்நிர்வாகம் மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து தவெக ஓராண்டு விழா மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்த வேறு இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழா நடைபெறும் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இந்த மாத இறுதிக்குள் இரண்டு விழாக்களையும் ஒரே நாளில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடே தற்போது வரை பேசப்பட்டு வரும் நிலையில் கட்சியின் ஓராண்டு விழா எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே வலுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மணிப்பூரில் குடியசுத் தலைவர் ஆட்சி அமல்.. பைரன் சிங் விலகிய சில நாட்களில் நடவடிக்கை!

news

அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்.. ராஜகண்ணப்பன் துறை.. பொன்முடிக்கு மாற்றம்

news

அதிமுக ஒன்றிணைந்தால் அனைவருக்கும் வாழ்வு... இல்லையேல் தாழ்வு... முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

news

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம்தான் எடப்பாடி பழனிச்சாமி.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

news

தவெக ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டத்தை.. பிரம்மாண்டமாக நடத்த.. விஜய் உத்தரவு.. ரெடியாகும் ரசிகர்கள்

news

கமல்ஹாசனுடன்.. நேற்று பி.கே.சேகர்பாபு.. இன்று உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.. எம்.பி. சீட் இருக்கா?

news

அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்கமுடியாதவர் எப்படி செங்கலை பிடுங்க முடியும்?: அமைச்சர் சேகர்பாபு

news

Mood of the Nation Poll: திமுக கூட்டணி செல்வாக்கு கிடுகிடு உயர்வு.. 39 சீட்டுகளையும் அள்ளுமாம்!

news

Mood of the Nation Poll: 300ஐ தாண்டும் தேஜகூ.. காங்கிரஸின் கையில் நடுக்கம்.. தளதளக்கும் தாமரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்