சென்னை : பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலக உள்ளதாக அறிவித்து விஜய் டிவி ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் சின்னத்திரை நடிகரான சதீஷ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரேட்டிங் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பின்னுக்கு தள்ளி பல மாதங்களாக பாக்யலட்சுமி சீரியல் தான் விஜய் டிவி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. பாக்யலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வருகிறார் சதீஷ். இவர் நடிக்கும் கோபி கேரக்டருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். வில்லனாக இருந்தாலும் தனக்கென தனி ஃபேன் பேஸ் கோபிக்கு உள்ளது.
மனைவியை வெறுக்கும் கணவராக, மூன்று வளர்ந்த பிள்ளைகளுக்கு அப்பாவாக, பெற்றவர்களுக்கு அடங்கிய மகனாக இருந்தாலும், தன்னுடைய விருப்பத்தை மட்டுமே பெரிதாக நினைத்து வாயில் வந்த பொய்களை சொல்லி, தனது பழைய காதலியான ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார் கோபி. அதே சமயத்தில் மனைவி பாக்யலட்சுமிக்கு தெரியாமலேயே விவாகரத்தும் வாங்குகிறார். பாக்யா வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே குடி வருகிறார்கள் ராதிகாவும், கோபியும்.
ஆனால் ராதிகா படுத்தும்பாடு தாங்க முடியாமல் ஓவராக குடிக்க ஆரம்பிக்கிறார் கோபி. அதே சமயம், பாக்யா பல விதங்களிலும் முன்னேறி வருவதால் பாக்யா மீது கோபிக்கு அன்பும் வர துவங்குகிறது. கோபி ஓவராக குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்பட, கடைசியாக அம்மா ஈஸ்வரி தலையிட்டு கோபியை மீண்டும் வீட்டிற்கே அழைத்து வருகிறார். ஆனால் யாரும் எதிர்பாராத புதிய திருப்பமாக ராதிகாவும் பாக்யாவின் வீட்டிற்கே வருகிறார். இப்போது கோபி, ராதிகா - பாக்யா இருவருடனும் ஒரே வீட்டில் இருக்கிறார்.
இரண்டு மனைவிகளுக்கு இடையே சிக்கி தவிக்கும் கணவர் கேரக்டரில் மிக அழகாக, யதார்த்தமாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார் சதீஷ், அவரது சொந்த பெயரே மறந்து அனைவரும் அவரை கோபி என்றே கூப்பிடும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் சதீஷ். இந்த சீரியலின் ஹைலைட்டே கோபி கேரக்டர் தான் என சொல்லும் அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களிடம் கோபி கேரக்டர் வரவேற்பை பெற்றது.
இப்படி அடுத்தடுத்த திருப்பங்களுடன் போய் கொண்டிருக்கிறது பாக்யலட்சுமி. இந்நிலையில் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். பாக்யாவிற்கு துரோகம் செய்யும் கோபி கேரக்டரில் நடிப்பதால் தன்னை பலரும் திட்டி தீர்த்து வருவது மனதிற்கு வேதனை அளிப்பதாக இதற்கு முன் பலமுறை வீடியோ வெளியிட்டுள்ளார் சதீஷ்.
இந்நிலையில் லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள வீடியோவில், நான் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேன். என்னுடைய இந்த முடிவு பலருக்கும் கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். இருந்தாலும் தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக இந்த சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். இன்னும் 10 அல்லது 15 எபிசோட்களுக்கு பிறகு நான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன். அனைவருக்கும் பிடித்த மாதிரி ஏதோ கொஞ்சம் நடித்துள்ளேன் என நினைக்கிறேன். எனக்கு கோபி கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்த விஜய் டிவிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
இதனால் வேதனையும் கமெண்ட் செய்து வரும் பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள். முடிவை மாற்றிக் கொள்ளும்படி கேட்டு வருகின்றனர். மற்றொரு புறம், பாக்யலட்சுமி சீரியலில் புதிய கோபியாக யார் என்ட்ரி கொடுக்க போகிறார் என்ற கேள்வி சின்னத்திரை வட்டாரத்தில் எழுந்துள்ளது.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}