சுப நிகழ்ச்சியா இருந்தாலும் சரி.. சி.எஸ்.கேவா இருந்தாலும் சரி.. மஞ்சள் தாங்க பர்ஸ்ட் அன்ட் பெஸ்ட்!

Apr 08, 2024,05:36 PM IST
- பொன் லட்சுமி

சென்னை: ஐபிஎல் வந்தாலே மஞ்சள் கலர்தான் எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும்.. சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரை விட அந்த கலர்தான் பளிச்சென்று கண்ணிலும் படும், மனதிலும் பதியும்.. மஞ்சளுக்கு அப்படி ஒரு மகிமை இருக்குங்க.

மஞ்சள்னா சும்மாவா.. மங்களகரமான நிறம் மட்டுமல்ல, பொருளும் கூட இந்த மஞ்சள்.. ஆமாங்க, மஞ்சளைப் பத்தித்தான் இப்போ பேசப் போறோம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவிலும் சரி மருத்துவத்திலும் சரி  அழகிலும் சரி முதலிடம் பிடிப்பது இந்த மஞ்சள் தான்... நம் முன்னோர்களின் காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் மங்களகரமாக  முதலிடம் பிடிப்பது இந்த மஞ்சள் தான்... ஒவ்வொரு வீட்டிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் முதல் அழகு சாதனங்கள் வரை எல்லா இடத்திலும் பயன்படும் பொருள் என்ற பெருமை இந்த மஞ்சளுக்கு உண்டு... இதோ அந்த மஞ்சளின் பயன்களை பற்றி பார்ப்போம்....

மஞ்சளின் வகை :-



பெரும்பாலும் தை மாதம்  தான் இந்த மஞ்சளின் அறுவடை நடைபெறும்.. கரிசல் மண்ணில் தான் அதிகமாக விளையும்  இந்த மஞ்சள் நான்கு வகைப்படும்  உதிர்ந்த மஞ்சள் , விரலி மஞ்சள், காமாளி மஞ்சள், தாய் மஞ்சள் .. இதில் விதைக்க  பயன்படுத்துவது தாய் மஞ்சள்.. அறுவடை முடிந்ததும் மஞ்சளை சேகரித்து  பக்குவமாக வேகவைத்து  கிட்டத்தட்ட  ஒரு மாதம் காலம் வெயிலில் காய வைத்து   மெஷின் மூலம் மஞ்சளை பிரித்து  எடுப்பார்கள்... உணவிற்கும் அழகுப்  சாதன பொருள்களுக்கும்  தேவையான மஞ்சள் பொடியாக இதிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்வார்கள்.

மருத்துவ குணங்கள் :-



மஞ்சள்  மிகச்சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது ... நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் கட்டில் அஞ்சரை பெட்டியில் முதல் இடம் பிடிப்பது இந்த மஞ்சள் தான்..  தினசரி சமையலில் மஞ்சளை பயன்படுத்தி வருவதன் மூலம்  பல்வேறு வகையான நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.. இருமல் பசியின்மை வயிற்று சம்பந்தமான பிரச்சினைகள், கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள்  இன்னும் பல பிரச்சினைகளுக்கு இந்த மஞ்சள் ஒரு மிகச்சிறந்த ஆன்டிபயாட்டிக் ஆகும்.

தீக்காயங்களில் ஏற்படும் கொப்புளங்களை தடுக்க மஞ்சள் பேஸ்ட் மிகச் சிறந்த ஆண்ட்டி செப்ட்டிக் ஆகும்... மழைக்காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை இருமல் தான்.. அதற்கு இளஞ்சூடான பாலில் சிறிதளவு மஞ்சள், சிறிதளவு மிளகுத்தூள் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால்  இருமல் தொண்டை கரகரப்பு போன்றவை சரியாகும்.

சுப நிகழ்ச்சிகளில் மஞ்சள் :-

அன்றிலிருந்து இன்று வரை புதிதாக ஒரு வீட்டில்  குடியேறப் போகும்போது  உப்பு, மஞ்சள் போன்றவற்றை கடவுள் படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர். புத்தாடை அணிவதற்கு முன்பும் மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் வைத்துக் கொள்வார்கள் அதைப்போல  திருமணம் காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அடிக்கப்படும் அழைப்பிதழ்களில் நான்கு புறமும் மஞ்சள் தடவி கொடுப்பார்கள்.

இன்றும் கோவில்களில்  மாரியம்மன் கோயிலுக்கு தீச்சட்டி எடுப்பவர்கள் மீது மஞ்சள் கலந்த நீர் தான் முதலில் ஊற்றப்படுகிறது. புதிதாக திருமணமான   இளம் ஜோடிகளுக்கு கொடுக்கப்படும் பொங்கல் சீர்வரிசையில் முதலிடம் பிடிப்பது இந்த மஞ்சள் தான்.. பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவார்கள்.

கோவில்களிலும் வீடுகளிலும் மஞ்சள் தூளை நீரில் கலந்து பிள்ளையார் பிடித்து அறுகம்புல் வைத்து பிள்ளையாராக வழிப்படுகிறார்கள்..
அன்றைய காலத்தில் கிராமபுறங்களில்  திருவிழாக் காலங்களில்  முறைப்பெண் முறை பையன்   மீது மஞ்சள் நீரை தெளிப்பர். ஆனால் இன்று இதை சினிமாக்களில் மட்டுமே காண முடிகிறது.. வயதானவர்கள் புதுமண தம்பதிகளை வாழ்த்தும்போது மணமகளை  மஞ்சள் குங்குமத்தோடு தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.

பெண்கள் வயதுக்கு வரும்போது மஞ்சள் நீராட்டு விழா என்று  பெரிய விழாவாக எடுப்பார்கள்... திருமணம் மட்டுமல்லாது கோவில் கொடை போன்ற எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் முதலில் இடம் பெறுவது இந்த மஞ்சள் தான்..

அழகு கலையில் மஞ்சள்:-



ரசாயன கிரீம் இல்லாத  காலகட்டத்தில் பெண்கள் மஞ்சளை தான் பயன்படுத்தி வந்தனர். மஞ்சள் பூசாத பெண்களையே அக்காலத்தில் பார்க்க முடியாது. மஞ்சள் பூசித்தான் பெண்கள் பெரும்பாலும் குளிப்பார்கள். பின்பு நாகரிக வளர்ச்சியின் காரணமாக பல்வேறு வகையான செயற்கை  கிரீம்களை  பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.

சாதாரண மஞ்சளுக்கு பதிலாக பெண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, தேமல், தோல் நோய்கள் போன்றவை ஏற்படாமல்  தடுக்கும்... ஆயுர்வேத சிகிச்சையிலும் சித்த மருத்துவத்திலும் முதன்மை இடம் பிடிப்பது இந்த மஞ்சள் ஆகும்... பலரும் இன்று கெமிக்கல்களை தவிர்த்து ஆர்கானிக் முறைக்கு மாறுவதால் இந்த மஞ்சள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

பெண்களே உங்களை அழகாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள  பல நூறு ஆயிரம் செலவழித்து அழகுக்காக கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு  இயற்கையாக கிடைக்கக்கூடிய மஞ்சளை  பயன்படுத்துங்கள்...  நம் பாரம்பரியத்தையும் உங்கள் அழகையும் போற்றி  பாதுகாத்துக் கொள்ளுங்கள். பளிச்சென்றும் இருங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்