சென்னை: இது காட்டுமிராண்டி தனமானது. கைது செய்யும் அளவிற்கு மகாவிஷ்ணு பெரிய தவறு செய்யவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மகாவிஷ்ணு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போன பிறவியில் செய்த பாவத்தால்தான் இந்தப் பிறவியில் கண் தெரியாமல் கால் கை இல்லாமல் பிறக்கிறார்கள். நோய்களால் அவதிப்படுகிறார்கள் என்றெல்லாம் இவர் பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவரது பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
மகாவிஷ்ணு மீது போலீசில் புகார்கள் குவிந்ததால், அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரை இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் அவரை வேனில் அழைத்து வந்து கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றது போலீஸ். மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசுகையில், திமுக எப்பவுமே இரட்டை வேடம் போடுகின்ற கட்சி. திருக்குறள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக பொதுமறையான நூல். ஆத்திகர்கள் நாத்திகர்கள் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல். அந்த திருக்குறளிலே முற் பிறவி, மறு பிறவி, 7 பிறவி என சொல்லப்பட்டிருக்கு.
மகாவிஷ்ணு மாற்று திறனாளிகளின் மனது புண்படும்படி பேசியது தவறு. அது அவருடைய அனுபவமின்மையைக் காட்டுகிறது. மற்றபடி அவரை கைது செய்வது தான் தீர்மானம் என்பது கிடையாது. அவரை அழைத்து காவல்துறையினர் இது போன்று மாற்றுதிறனாளிகளின் மனதை புண்படுத்தும் படி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கலாம்.
நீதிமன்றத்திலே சில நீதிமன்ற அவமதிப்புகளுக்கு மன்னிப்பு கேட்க கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் கைது செய்யும் அளவிற்கு அவர் தவறு ஒன்றும் செய்யவில்லை. அவர் மாற்றுத்திறனாளிகளின் மனது புண்படும்படி பேசியது தவறு. அது கண்டிக்கத்தக்கது. ஆனால் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்தின் தேவையற்ற நடவடிக்கை. இது காட்டு மிராண்டித்தனமாக இருக்கிறது. அவரை பள்ளிகளில் அழைத்து பேச கூறியதே தவறு என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}