சென்னை: டிடிஎப் வாசன் மீது தொடர்ந்து விபத்து ஏற்படுத்தக் கூடிய வழக்குகள் வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி ஜாமீன் மனுவை இன்று இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நிராகரித்து விட்டார்.
கடந்த 17ம் தேதி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரம் எனும் பகுதியில் தனது வாகனத்தில் முன் சக்கரத்தை தூக்கி சாகசம் செய்ய முயன்றபோது அவரது வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் வாசன் தலைகீழாக இருமுறை சுழற்றியடித்து தூக்கி விசப்பட்டார்.
காயமடைந்த டிடிஎப் வாசன் சாலையிலிருந்து சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். சாலையில் சென்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கு பின்னர் டி.டி.எப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் டிடிஎஃப் வாசன். அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அதை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் மீண்டும் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!