சென்னை: வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாலும் போரடிக்குது.. ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்யும்போதும் போரடிக்குது.. எங்கேயாச்சும் வெளில போய்ட்டு வரலாம்னு பார்த்தாலும் வேலை டை்டடா இருக்கு.. ஆனால் ஒரே ஒரு நாள் வேணும்னா ஒதுக்கலாம்ப்பா.. பட், ஒரு நாள்ல எங்க போக முடியும் .. அப்படின்னு நினைக்கிற ஆளா நீங்க.. இருக்கவே இருக்குங்க சூப்பரான ஒரு நாள் டூர்... எங்க தெரியுமா.. நம்ம புதுச்சேரிக்குத்தான்.
சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் விதம் விதமான டூர் பேக்கேஜை வைத்துள்ளது தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம். ஆன்மீக சுற்றுலா முதல் பல்வேறு வகையான பேக்கேஜ் டிடிடிசியிடம் உள்ளது. எல்லாமே பட்ஜெட் ரேட்தான். போகும் செலவு, சாப்பாட்டுச் செலவு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய சூப்பர் டூர் பேக்கேஜ்கள் இதில் உள்ளன.
அதில் புதுச்சேரி டூரை மட்டும் உருவி உங்கள் முன்பு இப்போது வைக்கிறோம். உங்களுக்கு செட் ஆச்சுன்னா, டைம் கிடைக்கும்போது ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துட்டு வாங்க.
எந்தெந்த இடமெல்லாம் கூட்டிப் போவாங்க?:
சென்னையிலிருந்து கிளம்பி புதுச்சேரிக்கு முதலில் சுற்றுப்பயணம் சென்றடையும். அங்கிருந்து ஆரோவில், புதுச்சேரி மியூசியம், புதுச்சேரி பீச், அரவிந்தர் ஆசிரமம், முதலியால் குப்பம் படகுக்குழாம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். மொத்தம் 9 இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுவார்கள்.
கிளம்பும் நேரம்:
காலை 6.30 மணிக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக வளாகத்திலிருந்து பஸ் கிளம்பும். 8 மணிக்கு மாமல்லபுரத்தில் காலை உணவு. அதன் பிறகு 10.15 மணிக்கு ஆரோவில் சென்றடையும். அங்கிருந்து 12.15 மணிக்கு புதுச்சேரி மியூசியம். அதை முடித்த பின்னர் 12.50 மணிக்கு பீச். 1.30 மணிக்கு லன்ச் வழங்கப்படும். 2 மணிக்கு அரவிந்தர் ஆசிரமம். 3.30 மணிக்கு முதலியார் குப்பம் படகுக் குழாம். இரவு 7 மணிக்கு சென்னைக்கு வந்தடைவீர்கள்.
டூர் நாட்கள்:
அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்.
பஸ் வசதி:
வால்வோ ஏசி, நான் ஏசி மற்றும் சாதாரண ஏசி வகுப்பு என 3 வகையான பஸ்கள் உள்ளன. உங்களுக்குத் தேவையான பஸ்ஸை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
கட்டணம் எவ்வளவு?:
சென்னை டூ புதுச்சேரிக்கு ஒரே நாளில் போய் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு வருவதற்கு ஒருவருக்கு ரூ. 1850 முதல் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். என்ன போய்ப் பார்த்துட்டு வரலாமா.. விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொண்டு புக் செய்து கொள்ளலாம்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}