Cauliflower Mallige: கோபி 65 சாப்பிட்டிருப்பீங்க.. கோபி மல்லிகா செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா?

Jul 05, 2024,05:49 PM IST

சென்னை: என்ன மக்களே! இன்னைக்கு அமாவாசை.. அதனால பெரும்பாலான வீடுகள்ல விரதம் இருப்பாங்க.. வெள்ளிக்கிழமையும் எக்ஸ்ட்ராவா சேர்ந்திருக்கு.. சுத்த சைவம்தான்.. விரத சாப்பாட்டுல என்னதான் பொறியல், வடை, பாயசம் செஞ்சாலும் இந்த குட்டீஸ்களுக்கு ஏதாவது ஒரு ப்ரை ஐட்டம் இருந்தால் தான் சாப்பிடவே பிடிக்கும். அது இருந்தாதான் கொஞ்ச சாப்பாடுனாலும் சாப்பிடுவாங்க.


அதுக்காகத்தான் ஒரு புது ஐட்டத்தை பக்கத்து ஸ்டேட்ல இருந்து எடுத்துட்டு வந்திருக்கோம் உங்களுக்காக...  எல்லோரும் காலிபிளவர் வச்சு செய்யிற கோபி 65 செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. காலிஃப்ளவர் மல்லிகா செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? என்னது மல்லிகாவா.. அ்படின்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேட்பது தெரிகிறது. அதை கரெக்டா சொல்லணும்னா காலிபிளவர் மல்லிகே.. இது கர்நாடகத்தில் ரொம்ப பேமஸ் உணவுங்க. நம்ம ஊரில் செய்யும் அதே காலிபிளவர் வறுவல்தான்.. இது கொஞ்சம் வித்தியாசமனது.. கூடவே ரொம்ப ஈஸியும் கூட.. அதே சமயம் ரொம்ப டேஸ்ட்டானதும் கூட.




காலிஃப்ளவரில் கொழுப்பு தன்மை கிடையாது. இதில் விட்டமின் சி மற்றும் மெக்னீசியம் சத்துக்களும் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மன அழுத்த நோய்கள், இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது.இவ்ளோ சத்துகள் உள்ள காலிஃப்ளவர அடிக்கடி உணவில் சேர்த்துகோங்க.


சரி காலிஃப்ளவர் மல்லிகா எப்படி செய்யணும்னு சொல்றோம்.. நோட் பண்ணிக்கோங்க.

 

தேவையான பொருட்கள்:


காலிபிளவர் - ஒன்னு

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி (அரைக்க)

பச்சை மிளகாய் - 4 (அரைக்க)

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

பூண்டு - 4 பல்(அரைக்க)

எலுமிச்சை- ஒன்று

சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு


செய்முறை: முதலில் காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது கல் உப்பை போட்டு கொதி வந்ததும், நறுக்கி வைத்த காலிஃப்ளவரை போட்டு சிறிது நேரம் வைத்திருக்கவும். எப்பவுமே காலிஃப்ளவர் சுத்தம் செய்யும் போது சுடுதண்ணீரில் போட்டு தான் சமையல் செய்யணும். ஏன்னா அதில் கண்ணுக்கு தெரியாத நிறைய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பின்னர் காலிஃப்ளவரை நன்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.


ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் 4 ,பூண்டு 4 பல் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு மிக்சிங் பவுலில் காலிஃப்ளவர், அரைத்த விழுது, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்  எலுமிச்சை சாறு, சோள மாவு ஒரு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன், கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு கலந்து ஒரு ஐந்து நிமிடங்கள் ஊற விடவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காலிஃப்ளவரை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை நன்கு காய்ந்ததும் ஒவ்வொரு காலிபிளவராக போட்டு பொரித்து எடுத்தால் காலிஃப்ளவர் மல்லிகா ரெடி. டேஸ்ட்டும் டிஃபரண்டா இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.


இந்த ஃபிரையை லஞ்ச்சுக்குக் கூட தாராளமா கொடுத்து விடலாம்.  வெளியே மொறு மொறுன்னு கிரிஸ்பியாவும் உள்ளே நல்ல சாப்டா, வித்தியாசமான சுவைல இருக்கும். எவ்ளோ பொறிச்சாலும் உடனே காலியாகுற இந்த காலிபிளவர் மல்லிகாவை செய்து பாருங்கள், தோழிகளே!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்