திரியம்பகாஷ்டமி.. பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி.. காலபைரவர் அவதரித்த திதி!

Mar 21, 2025,02:13 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஓம் பைரவனே போற்றி! 

ஓம் அஷ்டரூபனே போற்றி! 

ஓம் அஷ்டமி தோன்றலே போற்றி!

ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி!

ஓம் ஆனந்த பைரவனே போற்றி! 

ஓம் ஆலய காவலனே போற்றி!


மார்ச் -22   20 25 பங்குனி மாதம், எட்டாம் நாள், சனிக்கிழமை அன்று தேய்பிறை அதாவது ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் அஷ்டமி திதி ஆகும். அன்று காலபைரவர் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது. இந்த தேய்பிறை அஷ்டமியில்  திரியம் பகாஷ்டமி என்று சிவாலயங்களில் பைரவருக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறும்.


அஷ்டமி திதி தான் சிவபெருமானின் உக்கிர வடிவங்களில் ஒருவரான காலபைரவர் அவதரித்த திதியாகும்.




ஸ்ரீ கால பைரவர்


கபாலத்தை கையில் ஏந்தியவர். காதுகளில் அழகிய குண்டலங்களை தரித்து இருப்பவர் .கையில் தண்டத்தை வைத்திருக்கும் இவர் கருமை நிறமுடையவர். சர்ப்பத்தை பூணூலாக கொண்டவர். போர்க்களத்தில் காட்சி தருபவர் .இடையூறுகளை மாய்த்து தம் பக்தருக்கு இன்பம் அளிப்பவர்.


நேரம்: பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி மார்ச் 22 அன்று 1:.01 a m முதல் மார்ச் 23   1:41 am வரை. சனிக்கிழமை 22ஆம் தேதி நாள் முழுவதும் அஷ்டமி திதி உள்ளது.


இன்றைய நாள் சனீஸ்வரனின் எதிர்மறை தாக்கம், சனி பெயர்ச்சிக்கான பரிகாரமாக அமைந்திருப்பது மிகுந்த விசேஷமாக உள்ளது. சனிக்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கினால், சனி தோஷம் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது ஐதீகம்.


பங்குனி தேய்பிறை அஷ்டமி வழிபடும் முறை


சிவாலயங்களில் முதல் பூஜை விநாயகருக்கும், கடைசி பூஜை பைரவருக்கும் நடக்கும். சூரியன் அஸ்தமன நேரத்தில் பைரவருக்கு அஷ்டமி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. சிவாலயத்திற்கு சென்று அபிஷேக பொருட்கள் வாங்கிக்  கொடுக்கலாம். அரளி பூ மாலை, முக்கியமாக செவ்வரளி மாலை, எழுமிச்சம்பழ மாலை,, ரோஜாப்பூ மாலை, சிவப்பு வஸ்திரம் வாங்கிச் செல்லலாம். வடை மாலை சாற்றி வழிபடுவது மிகச்சிறந்தது. நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் அவரவர் வேண்டுதல்கள் நிறைவேறும். மிளகு தீப வழிபாடு செய்வது அதீத நன்மை பயக்கும்.


தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சனி ,ராகு போன்ற கிரகங்களின் நன்மைகளை தரக்கூடியது. வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, பண பிரச்சினைகள் குடும்ப பிரச்சினைகள் நிவர்த்தி ஆகும் .செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.


வீட்டில் பைரவாஷ்டகம் பைரவ போற்றி பாராயணம் செய்து, விளக்கேற்றி, மனதார வேண்டுபவர்களுக்கு மன அமைதி ,உடல்நலம், நீள் ஆயுள் ,நிறை செல்வம், உயர் புகழ் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை .காலத்தினால் தீராத பிரச்சனைகள் தொல்லைகள் நீங்கும். நல் அருள் கிட்டும்.


மேலும் இது போன்ற ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்