செமினாருக்காக போன இடத்தில்.. இஸ்ரேலில் சிக்கிக் கொண்ட திருச்சி பேராசிரியை!

Oct 13, 2023,06:42 PM IST

திருச்சி:  இஸ்ரேலில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற திருச்சியைச் சேர்ந்த வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியை டாக்டர் எஸ். ராதிகா  என்பவர் இஸ்ரேலில் சிக்கிக் கொண்டுள்ளார். அவரை மீட்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரியில், அக்ரானமி துறையில் உதவிப் பேராசிரியையாக இருப்பவர் டாக்டர் எஸ். ராதிகா. திருச்சி கருமண்டபம் பதகுதியைச் சேர்ந்தர். இஸ்ரேலில் நடைபெறும் சொட்டுநீர் பாசனம் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இவர் இஸ்ரேல் சென்றிருந்தார். இந்த நேரத்தில்தான் ராதிகா உள்ளிட்டோர் அங்கு மூண்ட ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேல் போர்ச்சூழலில் மாட்டிக் கொண்டனர்.




டாக்டர் ராதிகா பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இஸ்ரேலில் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதால் ராதிகாவின் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் கவலையுடன் உள்ளனர். 


இந்த நிலையில் டாக்டர் ராதிகாவை மீட்பது தொடர்பாக கல்லூரி முதல்வர் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் டாக்டர் ராதிகாவை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக  200க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பியுள்ளனர்.


படிப்படியாக அனைத்து இந்தியர்களும் இஸ்ரேலிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் நாட்களில் டாக்டர் ராதிகாவும் மீட்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் காஸா நகருக்கு அருகே உள்ள பகுதியில் மாட்டிக் கொண்டிருப்பதால் மீட்பு முயற்சிகளில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்