அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் சதம் அடித்த 7வது வீரராக உருவெடுத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்.
இந்தியா - ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒன்சைட் போட்டியாக மாறி விட்டது.. பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா, பேட்டிங்கிலும் அதே ஆதிக்கத்தை செலுத்தி இந்தியர்களின் இதயங்களை நொறுக்கி விட்டது.
கிட்டத்தட் 1.30 லட்சம் ரசிகர்களை சப்போர்ட்டுக்கு வைத்துக் கொண்டு இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தடுமாறியதை மனசு நம்ப மறுக்கிறது.. ஏற்க மறுக்கிறது. அந்த அளவுக்கு இந்தியாவின் அத்தனை வியூகங்களையும், ஆஸ்திரேலியர்களின் அதி வியூகம் தகர்த்து விட்டது.
குறிப்பாக அந்த அணியின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி விட்டார். கொஞ்சம் கூட நெருக்கடியை உணராமல் தன் விருப்பத்திற்கு அழகாக ஆடி அசத்தி விட்டார் டிராவிஸ் ஹெட். நிதானமாகவும், டென்ஷனே இல்லாமலும் ஆடிய அவர் சதம் போட்டு அணியை வெற்றியின் எல்லையை நோக்கி அழைத்துச் சென்று விட்டார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது அபூர்வமான விஷயம். அந்த வகையில், டிராவிஸின் சதமும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த 7வது வீரர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
95 பந்துகளில் தனது சதத்தை எடுத்தார் டிராவிஸ் ஹெட். குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் டிராவிஸ்.
கடைசியாக 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை கேப்டன் மஹளா ஜெயவர்த்தனே சதம் அடித்திருந்தார். அதன் பிறகு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் யாரும் சதம் போடவில்லை. தற்போதுதான் ஒரு சதம் வந்துள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் போட்ட 3வது ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ். இதற்கு முன்பு ரிக்கி பான்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் சதம் அடித்துள்ளனர். அதேசமயம், சேஸிங்கில் சதம் போட்ட வீரர்களில் இவர் 2வது வீரர். முதல் வீரர் இலங்கையின் அரவிந்தா டிசில்வா.
இதுவரை உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் சதம் போட்ட வீரர்கள்:
1975 உலகக் கோப்பை - கிளைவ் லாயிட் (102)
1979 உலகக் கோப்பை - விவ் ரிச்சர்ட்ஸ் (ஆட்டமிழக்காமல் 138)
1996 உலகக் கோப்பை - அரவிந்தா டிசில்வா (ஆட்டமிழக்காமல் 107)
2003 உலகக் கோப்பை - ரிக்கி பான்டிங் (ஆட்டமிழக்காமல் 140)
2007 உலகக் கோப்பை - ஆடம் கில்கிறிஸ்ட் (149)
2011 உலகக் கோப்பை - மஹளா ஜெயவர்த்தனே (103)
2023 உலகக் கோப்பை - டிராவிஸ் ஹெட் (ஆட்டமிழக்காமல் 127)
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}