காலவரையற்ற ஸ்டிரைக் ஏன்.. எங்களது கோரிக்கைகள் என்ன?.. போக்குவரத்து ஊழியர்கள் தரப்பு விளக்கம்

Jan 04, 2024,07:21 PM IST

சென்னை:  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் தங்களது போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து ஊழியர்கள் தரப்பு விளக்கம் தந்துள்ளது.


இதுதொடர்பாக ஊழியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:




2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது தற்போதைய முதல்வர் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுடைய அகவிலைப்படி உயர்வு பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும் திமுக துணை நிற்கும், தான் துணை நிற்பதாகவும் வாக்குறுதி அளித்தார், அதற்கு பிறகு எத்தனையோ முறை அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களையும் முதல்வர் வரும்போது எல்லாம் மனு கொடுத்தும் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தார், எதுவுமே பதில் இல்லாமல் தருகிறேன் பொறுத்திருங்கள் என்று எந்தவித உத்திரவாதமும் அளிக்கவில்லை.


அத்தோடு நீதிமன்றம்  தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியும் உச்சநீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்யப் பட்டிருக்கிறது இந்த அரசால். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதிமுக அரசுக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக உயர்த்தப்பட்ட, சட்டமன்ற உறுப்பினர்களது ஊதிய உயர்வை பெற மாட்டோம். போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினை தீர்க்க வேண்டும் என்று ஒரு நாடகத்தையும் நடத்தி முடித்தார். அது சென்ற ஆட்சியில் நடக்கவில்லை. அதற்கு பிறகும் இந்தஆட்சி அமைந்தும் பிரச்சனைகளை தீர்க்காமல் கடந்த ஆட்சியை குறை சொல்வதும் வேதனையானது, நியாயமற்றது. 


அந்த ஆட்சியை குறை சொல்லியே ஏமாற்றுவதும் வேதனையானது. எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஒரு நிலை ஆளுங்கட்சியாகும் போது ஏமாற்றும் நிலை என்பதும் வேதனை ஆனது. பொதுமக்களுக்கே தெரியும் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் 4000 பேருந்துகளுக்கு மேல்  பணியாளர்கள் இல்லாமல் இயங்காமல் உள்ளது. அதனால் தினந்தோறும் மக்களுக்கு பாதிப்பு. தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நான்கு ஆண்டுகளாக   மாற்றப்பட்டும் அது குறித்து இதுவரை எத்தனையோ முறை ஆர்ப்பாட்டம், வாயில் கூட்டம் நடத்தியும் எந்தவித பயனும் இல்லை.




அதோடு திமுக தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துவோம், புதிய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார்கள். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஏதோ போனஸ் கொடுப்பது கேட்காமலே கொடுத்ததாக அமைச்சர் சொல்கிறார். அது காலகாலமாக எல்லா ஆட்சியிலும் கொடுக்கப்பட்ட வந்ததுதான். தொழிலாளர் நலன் சட்டப்படி கொடுக்க வேண்டியது. அப்படித்தான் கொடுக்கப்பட்டுள்ளதே தவிர வேறு எந்த சலுகையோ அல்லது வேறு எந்த சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதையும் எல்லோருக்கும் உணர்த்திட வேண்டும். 

பேருந்து வாங்கப்பட்டால் போதுமா? பேருந்து இயக்குவதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை அது இதுவரை 

நிரப்பப்படாமல், அதுவும் தனியார் துறை மூலம் ஆள் எடுத்து பொதுத்துறை நிறுவனத்தை அழிப்பதற்கான வேலையில் அரசு ஈடுபட்டு அது நீதிமன்றத்தால் அந்தத் திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உரிமை பெற வேண்டியவர்கள் பெறவேண்டிய உரிமை தொகையை அவர்களுக்கு வழங்காமல் ஏமாற்றுவதும் நீதிமன்றத்தில் வாய்தா வாங்குவதும் நியாயமா? அதுவும் வாய்தா வாங்குவது, கொடுக்கப்படும் என்று வாய்தா வாங்கப்படவில்லை, முடியாது என்றே வாய்தா வாங்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலையையும் தற்போது ஒரு நிலையையும் இப்போது உள்ள ஆட்சி தான் எடுத்திருக்கிறது. அது மிக மிக வேதனையானது.


போக்குவரத்து கழகங்களை உருவாக்கி மக்கள் பயன்பாட்டுக்கு பொதுத் துறை நிறுவனமாக கொண்டு வந்து ஊதிய உயர்வு அகவிலைப்படி ஓய்வூதியம் எல்லாவற்றையும் வழங்கிய கலைஞரின் எண்ணத்திற்கு மாறாகவே இந்த அரசு செயல்படுகிறது. ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் இதுவரை 3000 பேர் பஞ்சப்படி உயர்வு கிடைக்காமல் சொற்ப ஓய்வூதியத்தில் பற்றாக்குறையால் மருந்து மாத்திரை வாங்குவதற்கு கூட வழியில்லாமல் ஏக்கத்தோடு மரணம் அடைந்து விட்டார்கள்.


போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர் நடத்துநர் நியமித்தல், ஊதிய உயர்வு ,புதிய பென்ஷன் திட்டம், ஓய்வுப் பெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு இவற்றை வழங்கிட முன்வருவதாக ஏதாவது அறிவிப்பு செய்தால் போராட்டம் கைவிடப்படும். நாம் பொது சேவை செய்கிறோம். நாங்கள் எந்த அளவிற்கு தினமும் உழைக்கிறோம், அதுவும் மக்கள் நலன் கருதி மிகை பணி பார்த்து பொது சேவையை மேம்படுத்திஉழைத்தும் எந்த பயனும் இல்லாமல்   ஏமாற்றப்பட்டு இன்றுவரை வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். 


மழை வெள்ளம் புயல் பண்டிகை எதற்குமே விடுப்பு எடுத்துக் கொள்ளாமல் 365 நாட்களும் பணியாற்றி வருபவர்கள் தான் போக்குவரத்து தொழிலாளர்கள் என்பதையும் உணர வேண்டும். நியாயமான போராட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  போராட்டத்தை நாம் தேடிச் செல்லவில்லை. போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு அரசால் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்திட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்