- அஸ்வின்
கருடன் திரைப்படத்தின் முன்னோட்டம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது மட்டுமில்லாமல் அவர்களை முனுமுனுக்கவும் வைத்திருக்கிறது. சூரி ஆரம்பத்தில் ஒரு சாதாரண நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ஆரம்பித்த அவரது நகைச்சுவை பயணம், படத்துக்குப் படம் மெருகேறி அவரை சிறந்த காமடியனாக உயர்த்தியது. ஆனால் அதற்கு முன்பாகவே அவர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். கடுமையாக போராடித்தான் அவர் தனக்கான இடத்தை அடைந்தார் என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுக்க அவர் காட்டிய மெனக்கெடல்கள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தன.
இப்போது கருடன் திரைப்படம் சூரிக்கு வித்தியாசமான தீனியாக அமைந்திருக்கிறது. விடுதலை திரைப்படத்திற்கு முன்பு வரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சூரி, விடுதலை திரைப்படத்திற்கு பிறகு கருடன் திரைப்படத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தப் படம் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவருவதால் சூரிக்கு விருது கூட கிடைக்கலாம் என்பது திரை ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. காரணம் சூரியின் டிரான்ஸ்பார்மேஷன் அப்படி இருக்கிறது.
விடுதலை திரைப்படத்திற்காக இரண்டு ஆண்டுகள் அந்த திரைப்படத்தில் மட்டுமே நடித்த அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, அதே வெற்றிமாறன் கதை திரைக்கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படமும் அவருடைய மெனக்கடலுக்கு மேலும் ஒரு உயர்வாக அமைந்திருக்கிறது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் கூட யாருக்கும் தெரியாது.. ஆனால் "புஷ்பா புருஷன்" என்று சொன்னால் போதும் குட்டிக் குழந்தைக்கும் கூட தெரியும். அந்த கதாபாத்திரம் அனைவரின் ஃபேவரட் கதாபாத்திரமாக இருக்கும். அந்த அளவுக்கு அது பயங்கர பேமஸ் ஆனது. புஷ்பா புருஷனாக வரும் ஒவ்வொரு காட்சிகளுமே நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பார். ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தை இந்த அளவிற்கு ஒருத்தரால் சிறப்பாக செய்ய முடியும் என்றால் அது சூரியால் மட்டுமே முடியும் என்று சொல்லலாம்.
அப்படி குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வந்த சூரி சடாரென விடுதலை படத்துக்காக அடியோடு மாறியபோதே பலரும் வியந்தனர். இப்போது கருடன் படத்தின் டிரெய்லர் இன்னும் ஆச்சரியப்பட வைக்கிறது. சூரி தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெகுவாக கவர்ந்திருப்பார். அது புரோட்டா சாப்பிடும் கேரக்டராக இருந்தாலும் சரி, வருத்தப்படாத வாலிபர் சங்க கேரக்டராக இருந்தாலும் சரி.. அந்த கேரக்டராகவே மாறிப் போியருப்பார். நகைச்சுவை மன்னன் என்று பெயர் வாங்கி விட்டு முழுமையாக தனது கெட்டப்பையே மாற்றிக் கொண்டு வந்து நிற்கிறார் சூரி.
படம் மே 31 அன்று திரையரங்குகளில் வெளிவருவதாக இருந்தாலும் கூட இப்பொழுதே படம் மீது எதிர்பார்ப்பு துவங்கியிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் இல்லாத திரைப்படமே இப்பொழுது இல்லை. ஆரம்பத்தில் அவர் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது, சூரி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வ்நதார். இப்போது இருவரும் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். முதல்முறையாக ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் அவர்கள் இருவரையும் பார்க்கப் போவதால் ரசிகர்களும் எக்சைட்டாக உள்ளனர். இது எந்த அளவிற்கு வெற்றிபெற போகிறது என்பது ஒரு எதிர்பார்ப்பு.
கருடன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் பொழுதே ரத்தம் கலந்த ஆக்ஷன் அதிரடியாக இருக்கிறது. சூரி கையில் அரிவாளோடும், முகத்தில் ரத்தத்தோடும் படு ஆக்ரோஷமாக வேறு வருகிறார். சிரிக்க வைத்துப் பார்த்த சூரியை, இப்படி ரத்த வெறி பிடித்த வேடத்தில் பார்ப்பதே முதலில் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஒரு நகைச்சுவை நடிகரை எப்படி இப்படி மாற்றி இருப்பார்கள் என்பது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
வருங்காலத்தில் எந்தெந்த கதாபாத்திரத்தை சூரி தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறார் என்பது இந்தப் படத்தின் வெற்றியில்தான் அடங்கியிருக்கிறது. அவரது நடிப்பின் இன்னொரு கோணத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இந்த கருடன் திரைப்படம் அமைந்திருக்கிறது. ஒரு பரோட்டா காமெடி மூலம் பிரபலமான சூரி இப்போது கையில் அரிவாளோடு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். விடுதலை படத்திலேயே அவரது நடிப்புத்திறனை வெற்றிமாறன் கொண்டு வந்து விட்டார். இப்போது அடுத்த லெவலுக்கு அவரை துரை செந்தில்குமார் அழைத்துச் செல்லப் போவதாகவே தெரிகிறது.
கருடன் படத்தின் டிரெய்லரில் சூரி வரும் காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் ஏற்படுத்துவதாக உள்ளது. டிரெய்லரே இப்படி என்றால் தியேட்டரில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. கருடன் டிரெய்லர் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. வெறித்தனமாக இருக்கிறது.. வேட்டை எப்படி இருக்கும் என்பதை தியேட்டரில் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}