சென்னை: விழுப்புரம் மாவட்டம் வராக நதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால் மதுரை திருச்சி நெல்லை போன்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இந்த ஃபெஞ்சல்புயல் புதுச்சேரி அருகே கடையை கடந்து வலுவிழந்தது.
இருப்பினும் தற்போது விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெருமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாகி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 51 cm பெருமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ஆறுகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை திருச்சி நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்குச் செல்லும் ரயில்கள் விழுப்புரம் வழியாக செல்ல வேண்டும். ஆனால் விழுப்புரத்தில் பெய்த தொடர் கனமழையால் விழுப்புரம் வராக நதிக்கரையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் நிலவி வருகிறது.
ஆற்றுப் பாலத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால் அதனை கடக்க முடியாமல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் பயணிகள் ரயில் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. காரைக்குடியிலிருந்து அதிகாலை 5:35 மணி அளவில் செல்ல வேண்டிய பல்லவன் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, புதுச்சேரி, நாகர்கோவில், செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் மதுரை செல்லும் வந்தே பாரத் மற்றும் தேஜஸ் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே சமயத்தில் மதுரை திருச்சி நெல்லை ஆகிய பகுதிகளில் இருந்து எழும்பூர் வரவேண்டிய ரயில்கள் காட்பாடி அரக்கோணம் வழியாக இயக்கப்படுகின்றன. செங்கோட்டை உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக திருவண்ணாமலை வழியாக சென்னை செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Annamalai.. நாளை சவுக்கடி.. லிஸ்ட் போட்டு சபதமிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை.. என்ன இப்படி சொல்லிட்டார்
Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!
Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி
Gold rate.. தங்கமே தங்கம்.. இப்படி வித்தா எப்படிம்மா வாங்குறது.. சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு!
Nallakannu: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மலையாள இலக்கிய உலகின் பிதாமகர்.. எழுத்தையே சுவாசித்தவர்.. மறக்க முடியாத எம்.டி. வாசுதேவன் நாயர்
வலுவிழந்தத காற்றழுத்த தாழ்வு.. ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rajinikanth -Sivakarthikeyan meet D Gukesh.. அடுத்தடுத்து சர்ப்பிரஸை அனுபவித்த டி. குகேஷ்!
Tsunami: சுனாமி ஆழிப்பேரலை தாண்டவமாடி 20 வருஷமாச்சு.. மீனவர்கள் குடும்பம் குடும்பமாக அஞ்சலி!
{{comments.comment}}