18 வயசுக்கு கீழ வண்டி ஓட்டுனா.. என்னாகும் தெரியுமா.. மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்!

Jul 23, 2024,04:48 PM IST

சிவகங்கை: தேவகோட்டை  சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை டிராபிக் இன்ஸ்பெக்டர் வைரமணி வழங்கினார். சாலை விதிமுறைகள் குறித்து அவர் சுவாரஸ்யமாக விளக்கியதை மாணவர்கள் கேட்டு விழிப்புணர்வு அடைந்தனர்.


தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில்  தேவகோட்டை நகர போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் கலா முன்னிலை வகித்தார். இவர்களுடன் போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் வைரமணி, எஸ்.எஸ்.ஐ அஸ்சாமு,காவலர் முத்து விஜயன், ஏட்டு யோவா ஆகியோர் கலந்து கொண்டார். 




ஆசிரியர் ஸ்ரீதர் விழாவில் கலந்து கொண்டவர்களை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் மற்றும் செல்போன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டினால் எவ்வளவு அபதாரம் விதிக்கப்படும் என்பது குறித்து  போக்குவரத்து விழிப்புணர்வை டிராபிக் இன்ஸ்பெக்டர் வழங்கினார். மேலும் இது குறித்து போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் வைரமணி மாணவர்களிடம் பேசும் போது கூறியதாவது:


பள்ளி கல்லூரி மாணவர்கள் வாகனங்களை 18 வயதுக்கு கீழ் ஓட்டக்கூடாது. அவ்வாறு ஓட்டும் நிலையில் அவர்களுக்கு 25 ஆயிரம் அபதாரம் விதிக்கப்படும். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் உண்டு. 25 வயது வரை வாகனம் ஓட்டுவதற்கு தடை செய்யப்படும்.


உங்கள் பெற்றோர்களிடம் கூறி அனைவரையும் ஹெல்மெட் அணியச் செய்யுங்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று உங்கள் வீட்டில் உள்ளவர்களை அன்போடு கேட்டுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் விபத்து இல்லாத சாலை பயணம் சாத்தியாகும் என்று கூறினார். 


போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வைரமணி , ஏட்டு யோவா ஆகியோர் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினர்.




கேள்வி : லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் எவ்வளவு ஃபைன் போடுவீர்கள்?


பதில் :  இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பைன் பண்ணப்படும். இளம் வயது மாணவர்கள் லைசென்ஸ் இல்லாமல் 18 வயதிற்குள் வாகனம் ஓட்டினால் அவர்களுக்கு லைசன்ஸ் கிடையாது. 18 வயதிற்குள் வாகனம் ஓட்டினால் 25,000 ரூபாய் பணமும், அவர்களது பெற்றோர்களுக்கு மூன்றாண்டுகள் தண்டனையும் வழங்கப்படும். வாகனம் ஒட்டிய மாணவர்களுக்கு  இருபத்தி ஐந்து வயது வரையில் லைசன்ஸ் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்படும்.


கேள்வி :  ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் எவ்வளவு ரூபாய் பைன் செய்யப்படும்? 


பதில் :  ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் ஆயிரம் அபராதம் செய்யப்படும். பின்னால் ஒருவர் அமர்ந்து இருந்து அவரும் ஹெல்மெட் இல்லாமல் சென்றால்  அவருக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்படும். மொத்தத்தில் 2000 ரூபாய் ஃபைன் ஆக விதிக்கப்படும்.

 

கேள்வி :  போக்குவரத்து காவலர்களுக்கு வெள்ளை நிற யூனிபார்ம் வழங்கப்படுவது ஏன்?


பதில் :  வெள்ளை நிறம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும். மற்ற காவலர்கலிருந்து போக்குவரத்து பிரிவு இருப்பதை தெளிவுபடுத்துவதற்காக கவனயீர்ப்பு இருக்கும்.. போக்குவரத்து காவலர்களுக்கு வெள்ளை நிற சீருடைகள் பயன்படுத்தப்படுகிறது.  


கேள்வி : சாலைகளில் ஏன் வெள்ளை கோடுகள் இடப்படுகிறது?




பதில் :  வெள்ளை கோடுகள் சென்டர் மீடியன் என்று கூறப்படுகிறது. அந்த கோட்டிற்குள்தான்  நாம் பயணம் செய்ய வேண்டும். அந்த கோட்டின் வலது புறமோ, இடது புறமோ சாலையில் எவ்வாறு செல்ல வேண்டுமோ, அது போன்று செல்ல வேண்டும் .அதற்காகத் தான் கோடுகள் இடப்படுகிறது. 


கேள்வி :  செல்போன் பேசிக் கொண்டே வண்டி ஒட்டி சென்றால் எவ்வளவு ரூபாய் பைன் செய்யப்படும்? 


பதில் : செல்போன் பேசிக் கொண்டே சென்றால் நம் சிந்தனை சிதறி விடும். எனவே ரூபாய் 10,000 பைன் விதிக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும் பத்தாயிரம் ரூபாய் பைன் விதிக்கப்படும். 


கேள்வி : லைசென்ஸ் எடுப்பதற்கு  என்னவெல்லாம் வேண்டும்? 


பதில் : லைசென்ஸ் எடுப்பதற்கு ஆதார் கார்டு வேண்டும்.. பிறந்த சான்றிதழ் வேண்டும். 3 பாஸ்போர்ட் சைஸ் பொட்டுக்கள் வேண்டும்.

 

கேள்வி :  சாலை போக்குவரத்தில் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுகிறது ? ஏன்? 




பதில் : கவன ஈர்ப்பைக் கொண்டு வரவே  இந்த நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நிறங்களை விட இந்த நிறங்கள் மிக எளிதாக கவனத்தை ஈர்க்கும். எனவேதான் இவற்றை பயன்படுத்துகின்றோம். 


கேள்வி :  சிகப்பு எரியும்போது  சாலை போக்குவரத்தில் தாண்டினால் எவ்வளவு பைன் செய்யப்படும்?


பதில் :  அதற்கு லைன் ஜம்பிங் என்று பெயர் .அது போன்று செய்தால் 500 ரூபாய் ஃபைன் விதிக்கப்படும். 


கேள்வி :  லைசென்ஸ் எத்தனை வருடங்களில் ரெனிவல் செய்ய வேண்டும் ? 


பதில் : லைசென்சை வயதைப் பொறுத்து புதுப்பிக்கலாம். சுமார்  10 முதல் 15 வருடங்களில் ரினிவல் செய்வதற்கான காலம் வழங்கப்படும். 


கேள்வி :  வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் மூன்று பேர், நான்கு பேர் சென்றால் என்ன தண்டனை வழங்கப்படும் ?


பதில் :   நீங்கள் எப்போதும் சாலையில் அவ்வாறு பார்த்தால் போட்டோ, வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் அவர்களை கண்டுபிடித்து  வழக்குப் பதிவு செய்வோம். தேவகோட்டையில் பல இடங்களில் இதுபோன்று செல்லும் நபர்களை விரட்டிச் சென்று அன்பான முறையில் அவர்களுக்கு எங்களால் அறிவுரை வழங்கப்படுகிறது. மாணவர்களே இதுபோன்று பெருமளவில் செல்கின்றார்கள். அவர்களுக்கு நாங்கள் பல்வேறு விதமான அறிவுரைகளை வழங்கி முதல்முறை அனுப்பிவிடுவோம்.  மீண்டும் இதுபோன்று செய்தால் வழக்குப் பதிவு செய்தோம்.


கேள்வி :  ஆட்டோக்களில் ஓட்டுநர்கள் என்ன விதமான சீருடை அணிய வேண்டும்?




பதில் :  ஆட்டோ ஓட்டுனர்கள் காக்கி சட்டை அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லவில்லை எனில் 500 ரூபாய் பைன் போட்டு விடுவோம். சாலையில் இடது புறம் மட்டுமே செல்ல வேண்டும். அவசியம் ஹெல்மெட் அணிந்து வாகனங்களில் பயணம் செய்ய வேண்டும். லைசென்ஸ் பெற 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆதார் நகல் கொடுக்க வேண்டும். பிறந்த சான்றிதழ் கொடுக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொடுக்க வேண்டும்.


இவற்றையெல்லாம் கொடுத்தால் லைசென்ஸ் கிடைக்கும். நமக்கு ஓட்டவும் கற்றுக் கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுதுதான் லைசென்ஸ் கிடைக்கும். லைசென்ஸ் முதலில் டூவீலர்க்கு  வாங்கலாம். பிறகு கார் போன்ற வாகனங்களுக்கு வாங்கலாம். பிறகு சிறிது நாள் கழித்து ஹெவி வாகனங்களுக்கும் நம்மால் வாங்க இயலும். லைசென்ஸ் வாங்கி வாகனம் ஓட்டுவதே சிறந்தது. சாலைகளில் நாம் போக்குவரத்து காவலர் கையில் இருக்கும் சிக்னல்களையும்  பார்த்து செல்ல வேண்டும். 


கையில் எரியும் லைட்  சிவப்பு இருக்கிறதா, பச்சை இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கையில் ஸ்டாப் என்ற போர்டு வைத்தால் அதனையும் நாம் மதித்து வண்டியை நிறுத்தி விட வேண்டும் என்று கூறினார்கள். இறுதியில் ஆசிரியர் முத்துலட்சுமி நிகழ்வில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்