- மஞ்சுளா தேவி
சென்னை: ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதால், நடிகர் தனுஷின் மூத்த மகனுக்கு போக்குவரத்து காவல்துறை 1000 ரூபாய் அபராதம் விதித்தனர். தனுஷ் மகனிடம் டூவீலர் ஓட்டுவதற்கான உரிமமும் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.
அண்ணண் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் தனுஷ். எதார்த்தமான நடிப்பின் மூலம் இவர் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்கிறார். நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு வயது 17.
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் .இரண்டு மகன்களையும் ஐஸ்வர்யா தனது பாதுகாப்பில் வளர்த்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது நடிகர் தனுஷ் தனது மகன்களை சந்தித்து வருகிறார். ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்த்தை வைத்து லால் சலாம் படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். அந்தப் பணியில் பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகன், விலை உயர்ந்த, ஆர்15 பைக்கை போயஸ் கார்டன் பகுதியில் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் ஹெல்மட்டும் அணியவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்தன. 18 வயது கூட நிரம்பாத நிலையில், லைசன்ஸும் இல்லாமல் (18 வயது நிரம்பினால்தான் லைசன்ஸ் வாங்க முடியும்), ஹெல்மட்டும் போடாமல் டூவீலர் ஓட்டிய தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் மகன் மீது சட்டம் பாயாதா என்ற கேள்விகள் எழுந்தன.
இதையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் வீடியோவில் பைக் ஓட்டுவது தனுஷின் மகன் தானா என்று உறுதி செய்தனர். பின்னர் தேனாம்பேட்டை காவல்துறையினர் தனுஷின் இல்லத்திற்கு நேரடியாக சென்றும் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, முறையாக பயிற்சி அளிப்பவர் வைத்தே பைக் கற்றுக் கொள்வதாகவும், இதனால் ஓட்டுனர் உரிமம் பெறவில்லை எனவும் தெரிய வந்தது.
இதையடுத்து பயிற்சியாளர் வைத்து பைக் ஓட்டியதால் லைசென்ஸ் இல்லாததற்கு அபராதம் விதிக்காமல், ஹெல்மட் போடாமல் ஓட்டியதற்காக மட்டும் ரூ. 1000 அபராதம் விதித்தனர் காவல்துறையினர்.
தனுஷ் மகன் மட்டும்லலாமல், யாராக இருந்தாலும் வாகனம் ஓட்டும்போது உரிய பாதுகாப்புடன் அதை பயன்படுத்துவது அவசியம். டூ வீலராக இருந்தால் உரிய லைசன்ஸ் இருப்பது அவசியம், தலைக்கு ஹெல்மட் போட வேண்டியது முக்கியம். சாலை விதிகளை மதிக்க வேண்டியது அதை விட அவசியம். அதி நவீன அதி வேக பைக் என்பதற்காக வீலிங் செய்வது, அதி வேகமாக ஓட்டுவது, சாகசம் செய்வது போன்றவற்றையும் இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}