ஜன. 27ம் தேதிக்குள் நிதி வரும்.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு.. டி.ஆர்.பாலு நம்பிக்கை

Jan 13, 2024,04:32 PM IST

டெல்லி: தமிழ்நாட்டுக்கு மழை வெள்ள நிவாரண நிதியை விரைந்து அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழ்நாடு எம்.பிக்கள் குழு நேரில் கோரிக்கை விடுத்தது.


திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர். பாலு தலைமையிலான இந்தக் குழுவில் 8 பேர் இடம் பெற்றிருந்தனர். மதிமுக நிறுவனர் வைகோ எம்.பி., எம்.பிக்கள், சுப்பராயன், ஜெயக்குமார், நடராஜன், ரவிக்குமார், நவாஸ் கனி, சின்ராஜ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.


அமித்ஷாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களை எம்.பிக்கள் குழு சந்தித்தது. அப்போது டி.ஆர்.பாலு பேசுகையில், தமிழ்நாட்டின் சென்னை, தென் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள புயல் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துரைத்தோம். ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் அவருக்கு விவரித்தோம். 




மிக்ஜாம் புயல் தாக்கி ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டதையும் அவருக்கு எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள நிவாரணமாக ரூ. 37,907 கோடியை விரைந்து விடுவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவருக்கு எடுத்துரைத்தோம்.


வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் வந்து பார்த்துள்ளனர். மத்திய நிபுணர் குழுக்களும் வந்து போயுள்ளது. எனவே மத்திய அரசு, தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாக நாங்கள் கருதவில்லை. 


மத்திய நிதியமைச்சர் வெள்ளம் பாதித்த பகுதிககளைப் பார்வையிடுவது இதுவரை நடந்திராதது. நிர்மலா சீதாராமன் வந்து பார்த்துள்ளார். எனவே மத்திய அரசு புறக்கணிப்பதாக கூற முடியாது.  நடைமுறைகள் நிறைய உள்ளன. அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்து, அதை ஆய்வு செய்து பின்னர்தான் உத்தரவுகள் எடுக்கப்படும். நான் அமைச்சராக இருந்திருக்கிறேன். எனவே இந்த நடைமுறைத் தாமதம் எனக்குத் தெரியும்.


இங்குள் எம்.பிக்களும் இதுகுறித்துத் தெரிந்தவர்கள்தான். எனவே யாரும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேச மாட்டோம். ஜனவரி 15ம் தேதி மத்திய குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார். ஜனவரி 27ம் தேதிக்குள் நிதி ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதை நம்புகிறோம். ஜனவரி 27ம் தேதிக்குள் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் டி.ஆர்.பாலு.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்