சென்னை: பிரபல நடிகர் பிரஷாந்த்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
1990ம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசாந்த். 90களில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்த நாயகன். 1996ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான கல்லூரி வாசல் என்ற படம் மெகா ஹிட் அடித்தது. அதன்பின்னர் வெளியான ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, குட்லக், பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும், மஜ்னு உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இதனால் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார் பிரசாந்த். சில ஆண்டுகள் சினிமாவின் பக்கம் வராமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, பிரசாந்த் விஜய்யுடன் சேர்ந்து தி கோட் படம் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அஸ்திவாரம் போடப்பட்ட அந்தகன் திரைப்படம் சமீபத்தில் வெளியாக உள்ளது. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அந்தாதூன் படத்தை தமிழில் ரீமேக்கின் மூலம் வெளியாகும் படம் தான் அந்தகன். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இமையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளானர்.
இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவராமல் உள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவந்த பின்னர் பிரசாத் விஜய்யுடன் இணைந்து நடித்த தி கோட் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
{{comments.comment}}