மாணவர்களே.. தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. இதாங்க காரணம்!

Sep 13, 2024,04:05 PM IST

சென்னை:   தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.


தமிழகத்தில் நாளை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுத உள்ளனர்.இத்தேர்வு சுமார் 2763 மையங்களில் காலை 9 மணிக்கு தேர்வு தொடங்குகிறது.  இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வின் போது பறக்கும் படையின் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் காவலர்க் நியமிக்கப்பட்டுள்ளனர்.




இத்தேர்வினை எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வுக்கூடத்திற்கு வர வேண்டும். தேர்வர்கள் 9 மணிக்கு மேல் வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இந்த தேர்வு மையங்கள் குறிப்பாக பள்ளிகளில் தான் நடைபெறும் என்பதால், நாளை தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொது விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை விவரத்தை பள்ளிகளுக்கு தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல். 2024-2025 கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியில்  மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைச் சுட்டிக்காட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்