சென்னை: லோக்சபா தேர்தலில் மக்கள் அதிருப்தி பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதாலும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரே குரலில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும், தமிழ்நாட்டில 34 டோல்கேட்டுகளில் இன்று முதல் அமல்படுத்தப்படவிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அனேகமாக ஏப்ரல் 19ம் தேதிக்குப் பிறகு இது அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு கட்டண உயர்வைக் கைவிடுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள், லாரி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்தும் கூட, அப்படியெல்லாம் இதை நிறுத்தி வைக்க முடியாது, டெக்னிக்கலாக ஏப்ரல் 1ம் தேதியன்று கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
முன்னதாக நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 63 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் 34 சுங்க சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் உள்ள 36 டோல்கேட்டுகளில் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதலும், மற்ற டோல்கேட்டுகளில் செப்டம்பர் 1ம் தேதி முதலும் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்தாண்டிற்கான கட்டண உயர்வு ஏப்ரல் 1 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 34 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றிற்கான கட்டணம் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரையும் உயரும் எனவும் கூறப்பட்டது.
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படுவது குறித்து வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குனர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}