சென்னை பீச் டூ திருவண்ணாமலை.. மின்சார ரயிலில்.. விரைவில் கழிவறை வசதி.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

May 15, 2024,06:38 PM IST

சென்னை:  சென்னை கடற்கரை -  திருவண்ணாமலை இடையே  மார்ச் 2 முதல் மின்சார ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த ரயிலில் கழிவறை வசதி இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் கோயில்கள், சுற்றுலா தளங்கள், சொந்த ஊர்கள் போன்ற இடங்களுக்கு சென்று தங்களின் கோடை விடுமுறைகளை கழித்து வருகின்றனர். அந்த வரிசையில்  இந்த கோடை விடுமுறை காலத்தில் திருவண்ணாமலைக்கு அதிக அளவில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் ரயில்கள் இயக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தன.




இதனைத் தொடர்ந்து 19 வருடங்களுக்குப் பிறகு சென்னை பீச் டூ திருவண்ணாமலை வரை மே 2 முதல் மின்சார‌ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படுகிறது. இரவு 12:5 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அதேபோல மறுமார்க்கமாக அதிகாலை அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு சென்னை பீச்சுக்கு 9:50 மணிக்கு சென்றடைகிறது. 


மொத்தம் 12 பெட்டிகளை கொண்ட இந்த மின்சார ரயிலின் பயண நேரம் சுமார் ஆறு மணி நேரம் ஆகும். பயண கட்டணம் ரூபாய் 50 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சென்னை பீச் - திருவண்ணாமலை இடையிலான இந்த ரயிலின் பயண கட்டணம் குறைவாக இருப்பதாலும், ஆறு மணி நேரத்தில் போய் விடலாம் என்பதாலும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.  அதேசமயம், இந்த ரயிலில் கழிப்பறை வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் திருவண்ணாமலை - சென்னை பீச் மற்றும் சென்னை பீச் - திருவண்ணாமலை ஆகிய இரு வழித்தடங்களிலும் இயக்கப்படும் ரயிலில், கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பயணிகள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் மின்சார ரயில்களில் விரைவில் கழிவறை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இது குறித்து தெற்கு ரயில்வே கூறுகையில், மின்சார ரயில்களை பொறுத்தவரையில் கழிவறை வசதி இல்லாத ரயில் பெட்டிகள் ஐ.சி.எப் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல கழிவறையுடன் கூடிய மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியும் பெரம்பூர் ஐ.சி.எப் பில்  விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த மின்சார ரயில்களில் கழிவறை வசதிகள் பணி நிறைவடைந்த உடன் விரைவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்