3வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. கிளம்புங்க கிளம்புங்க.. நகை வாங்க கரெக்டான டைம்!

May 14, 2024,11:15 AM IST

சென்னை: தொடர்ந்து 3வது நாளாக சரிந்துள்ளது தங்கம் விலை.: ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கடந்த வெள்ளியன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்திருந்தது.  அதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160ம், நேற்று திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.200ம் குறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.  கடந்த 3 நாட்களில் மட்டும் நகை விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. 


இந்த விலை குறைவால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகை விலை உயர்ந்து வந்த நிலையில் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மிகுந்த கவலை அடைந்து வந்தனர். தற்பொழுது நகை  விலை குறைவு இது தான் சரியான நேரம் நகைப்பிரியர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். கிளம்புங்க கிளம்புங்க நகை வாங்க. அதுக்கு முன்னாடி நகை விலை குறித்த விபரத்தை பார்த்துட்டு போங்க...!


சென்னையில் இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,690 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 35 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.280 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,520 ரூபாயாக உள்ளது. 


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,298 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,384 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. 


சென்னையில் வெள்ளி விலை...


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி நிலை இன்று உயர்ந்துள்ளது.இன்று 1 கிராம் வெள்ளி விலை  0.70 காசுகள் உயர்ந்து ரூ.90.70 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 725.60 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.90,000க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.700 உயர்ந்து ரூ.90.700க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் குறைந்திருந்த வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.


இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் தருவதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று தங்கம் விலை குறைந்தும் வெள்ளியின் விலை அதிகரித்தும் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்