டெல்லி: ஆரோக்கிய மற்றும் மகிழ்ச்சியான நல்வாழ்வை ஊக்குவிக்கும் வகையில் இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.
தற்போதுள்ள டிஜிட்டல் மயமான காலகட்டத்தில் மகிழ்ச்சியை மறந்து மக்கள் இயந்திரம் போல் ஓடிக்கொண்டிருக்கின்றனர். உறவினர்கள், குழந்தைகள், மனைவி, கணவன் என யாரிடமும் மனம் விட்டு பேசுவதற்கு நேரத்தை ஒதுக்காமல் கூட பணியாற்றி வருகின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து பேசும் மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளாமல், பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் பலரும் மகிழ்ச்சியை மறந்து மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதனால்தான் நம் முன்னோர்கள் மனம் விட்டு பேசுங்கள். வாய்விட்டு சிரியுங்கள் நோய் விட்டுப் போகும் என அப்போதே கூறியுள்ளனர்.
எது சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு, அதை பின்பற்றினாலே நாம் வாழ்க்கை சிறக்கும். அதே சமயத்தில் நம் மனதுக்குள்ளையே மகிழ்ச்சி துக்கம் என எதையும் வெளிப்படுத்தாமல் இருந்தால் நம் உடல் தான் பலவீனப்படும். நம் ஆயுள் குறைய கூடும். இதனால் ஒவ்வொரு மனிதனும் அவரவர் வாழ்க்கையில் மகிழ்ச்சிகளையும் துக்கங்களையும் வெளிப்படுத்திய குடும்பத்துடன் மகிழ்வாக வாழ வேண்டும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் எப்படி வாழ்கிறோமோ அதே போன்று தான் நம் குழந்தைகளும் நம்மை பின்பற்றி நல்ல வழியில் செல்வதற்கு சிறந்த உந்துதலாக அமையும்.
இது மட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் கூறியபடி வாய்விட்டு கண்டிப்பாக சிரிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் உடலில் உள்ள அனைத்து ஹார்மோன்களும் தூண்டப்பட்டு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். முகம் பொலிவு பெறும். ஆயுள் கூடும். ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் சிரிப்பை மறந்து மக்கள் இறுக்கமாக வாழ்ந்து வருகின்றனர். மனசுமையை அதிகமாக்கி வருகின்றனர். இதனால் அமெரிக்கா லாபிங் தெரப்பி என ஒரு வகுப்பை நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்டு வாய்விட்டு சிரித்தால் எந்த நோயும் அணுகவில்லை என ஆய்வில் கூறுகின்றனர்.
இதைத்தான் நம் முன்னோர்கள் அன்றே சொன்னார்கள். இதன் மூலம் ஒவ்வொரு தனிநபரும் மகிழ்ச்சியை உணர்ச்சியாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவரவர் உரிமையாக எடுத்துக் கொண்டு வாழ வேண்டும். அதேபோல் உறவுகளும் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளித்து தனிநபரின் வாழ்வுக்கும் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்க வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஐ.நா சபையானது தனிநபரின் வாழ்க்கையில் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியினை அங்கீகரிக்கும் நோக்கில், மார்ச் 20 ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு வருடமும் மார்ச் 20 ஆம் தேதி மகிழ்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக உலகமெங்கும் உள்ள மக்கள் தங்களின் பொது வாழ்க்கையில் மகிழ்ச்சியின் உச்சத்தை உணர வைப்பதே இந்த தினத்தின் நோக்கமாகும். அந்த வகையில் உலக மகிழ்ச்சி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
உலகிலேயே மகிழ்ச்சியான நாடு
இதன் மூலம் ஐநா ஒவ்வொரு வருடமும் இந்த நாளில், மகிழ்ச்சி அறிக்கை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் மொத்தம் உள்ள 146 நாடுகள் பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பின்லாந்து மகிழ்ச்சியான நாடு என பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்தியா 126வது இடத்தில் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் நாட்டில் அதிகரித்து வரும் மனநல நெருக்கடி மற்றும் நோய்த்தொற்று காரணமாக பின் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சி அறிக்கை பட்டியலில், இந்தியா மீண்டும் அதே 126 வது இடத்தை பிடித்துள்ளது. இதற்குக் காரணம் அதிக மக்கள் தொகை அடர்த்தி, வேலையின்மை, மனநோய், சமத்துவமின்மை போன்ற நிலைகளை கொண்டுள்ளது. இருப்பினும், அரசு இதனை கட்டுப்படுத்த சுகாதாரம் மேம்பாட்டுக்காகவும், மன நிலையை சீர்படுத்துவதற்காகவும் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது.
பின்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் நார்வே போன்ற நோர்டிக் நாடுகள் தொடர்ந்து இந்த வருடமும் முதலிடத்தில் உள்ளன. பின்லாந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் அந்நாட்டின் உயர்வான வாழ்க்கை தர நிலைகள், சிறந்த சுகாதார சேவைகளை கொண்டுள்ளதேயாகும்.
பிரச்சினைகள், கஷ்டங்கள், சங்கடங்கள் இல்லாத வாழ்க்கை யாருக்குமே இருக்காது.. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையான பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் தாண்டித்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்.. எனவே நமக்கு சங்கடம் தரும் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விட்டு சந்தோஷத்தை முதன்மைப்படுத்தி வாழ்க்கையை நிம்மதியாக வாழ ஆரம்பியுங்கள்.. நிச்சயம் அது இனிக்கும்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}