World Teachers' Day.. ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்.. !

Oct 05, 2023,10:39 AM IST

- மீனா


உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 அன்று அவரை கௌரவப்படுத்தும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோம் இது நாம் யாவரும் அறிந்ததுதான். ஆனால் இன்று அக்டோபர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக  இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 


1994 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி நம் வாழ்வில் ஆசிரியர்கள் ஆற்றும் பங்களிப்பை கொண்டாடவும் அவர்களை கௌரவப்படுத்தவும் இந்த நாளை  உலக ஆசிரியர் தினமாக  யுனெஸ்கோ அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் உலக ஆசிரியர் தினம் வெவ்வேறு கருப்பொருளை கொண்டு கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு "நாம் விரும்பும் கல்விக்கு தேவையான ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறையை மாற்றும் உலகளாவிய கட்டாயம்" என்ற கருப்பொருள் அடிப்படையில் இன்று கொண்டாடப்படுகிறது.




இது ஆசிரியர்களின் எண்ணிக்கையில் உள்ள பற்றாக்குறையை குறைத்து அவர்களின் பலத்தை  உலக அளவில்  அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு ஏற்படுத்தப்பட்டது இந்த கருப் பொருள். இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை கௌரவிப்பதோடு, அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதில் அவர்களுடைய பங்களிப்பையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆசிரியர் தினத்தை கொண்டாடும் விதத்தில் கல்வி அமைப்புகள், சமூகங்கள் ஆசிரியர்களை எவ்வாறு அங்கீகரிக்கின்றன, பாராட்டுகின்றன மற்றும் ஊக்குவிக்கின்றன  என்பதனை அறிந்து கொள்ள வழி வகுக்கும். 


ஏனென்றால் ஒவ்வொரு துறையில் இருக்கும் வல்லுநர்கள் அந்தப் துறையை சார்ந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி அதன் வளர்ச்சிக்கு  பாடுபடுவார்கள். ஆனால் இந்த சமுதாயத்தில் உள்ள அனைத்து துறைகளுமே வளர்ச்சி அடைய வேண்டும் என்று தன் மாணவர்களை அதற்கு ஏற்றார் போல் தயார்படுத்துகிறார்கள். ஏனென்றால் நம் பிறந்து வளர்வதற்கு தாயும் தந்தையும் எவ்வளவு நம் வாழ்க்கையில் முக்கிய பங்காக  இருக்கிறார்களோ அதே அளவிற்கு நம்மிடம் இருக்கும் திறமையை உலக அறியச் செய்து ,நம்முடைய திறமையை நமக்கே அடையாளம் காட்டும் நம்முடைய ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. 


இது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதில் மிக முக்கியமானவர்களாக  நம்முடைய  ஆசிரியர்கள்  உள்ளனர். அவர்கள் எவ்வாறு பாடங்களை மாணவர்களுக்கு எளிமையாக புரியவைத்து அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வந்து ,அதை சமுதாயத்திற்கு எவ்வாறு பயன்பாடும் என்று ஊக்கப்படுத்தி, முயற்சித்து அதை நிறைவேற்றியும் வருகிறார்கள். ஏனென்றால் அத்தகைய  சக்தி உடையவர்கள் தான் நம் ஆசிரியர்கள். 




இந்த சமுதாயத்திற்கு ஒரு நல்ல மனிதனை உருவாக்க வேண்டும் என்பதில் தான் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி, தன் வாழ்க்கையை தன்னுடைய மாணவர்களுக்காகவே அர்ப்பணித்து "ஆசிரியர் பணியே அறப்பணி" என்று ஆசிரியர் பணியை ஒரு தியாகமாக செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களை கௌரவப்படுத்தாமல் இருக்கலாமா. அதற்காகவே இந்த  நாளில் அவர்களையும் பாராட்டி அவர்கள் பணியை மேலும் சிறப்பாக செய்ய ஊக்கப்படுத்தி அவர்களை நாம்  கொண்டாடலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்