- மீனா
"சிறு துளி பெருவெள்ளம்"
இந்த பழமொழியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ஒவ்வொருத்தரும் இந்த பழமொழியை யாராவது சொல்லி கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையில் இந்த பழமொழிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. எப்படி என்றால் சிறுக சிறுக சேமிக்கும் பணம் ஒரு நாள் நமக்கு உயிர் காக்கும் அளவுக்கு கூட உதவிடலாம். இப்ப எதுக்கு இத சொல்றீங்கன்னு பாக்குறீங்களா. ஏனென்றால் இன்று "உலக சேமிப்பு தினம்" .. அப்போ இதை எப்படி சொல்லாமல் இருக்க முடியும் .
உலக சேமிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த சேமிப்பு தினத்திற்கு மற்றொரு பெயரும் உண்டு. அது சிக்கன தினம். ஏனென்றால் சிக்கனத்திற்கும் சேமிப்பிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எந்த ஒரு விஷயத்தையும் சிக்கனமாக செய்யும் போது அது நமக்கான அல்லது மற்றவர்களுக்கான சேமிப்பாக மாறுகிறது. அதனால் தான் இந்த நாளை சிக்கன நாள் என்றும் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக சேமிப்பு என்பது நாம் எல்லோருடைய வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கடன் வாங்காமல் மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் நிலையில் இருப்பார்கள்.
சேமிப்பதற்கு பல காரணங்கள் நமக்கு இருக்கும். அதில் முக்கியமானது என்றால் கல்வி, சொந்தமாக வீடு, இடம் வாங்குதல், மருத்துவ செலவு, முதிய வயதின் பாதுகாப்பு போன்ற ஒவ்வொரு நபருக்கும் சேமிப்பிற்கான காரணங்கள் மாறுபடுகின்றன. ஆனால் எல்லா தேவைகளுக்கும் பொதுவானது என்றால் அது சேமிப்பு தான். சேமிப்பதற்கான ஒரு நாளை கடைபிடிப்பது தனிப்பட்ட நாடுகளின் விபரங்கள் இருந்தாலும் உலக சேமிப்பு தினம் என்ற யோசனையை உலக அளவில் பிரபலப்படுத்தியது. ஏனென்றால் உலக மக்களின் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்வதே இதன் நோக்கம்.
முன்பு போர் ஏற்படும் காலங்களில் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் அவர்களின் சிக்கனத்தின் மூலம் சேமிக்கப்பட்டவைகளால் பூர்த்தி செய்யப்பட்டது. அதனால் இரண்டாம் உலகப்போரின் முடிவில் எப்பொழுதும் இல்லாத அளவில் சிக்கனம், சேமிப்பு என்பது பிரபலமடைந்தது. அவசர சூழ்நிலையை சந்திக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் எனில் அதற்கும் சேமிப்பு மிக அவசியம். அதனால் வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இதை சுட்டிக் காட்டும் விதமாக 90ஸ் மாணவர் பருவத்தில் இருந்தவர்கள் எல்லாரும் பள்ளியில் "சஞ்சாய்கா திட்டம்" என்ற திட்டத்தின் மூலம் ஆசிரியர்களிடம் பணம் கொடுத்து சேமிக்க பழக்கப்படுத்தப்பட்டனர்.
ஏனென்றால் சிறு வயதில் நாம் கடைபிடிக்கும் எந்த ஒரு நல்ல பழக்கமும் தன்னுடைய வாழ்நாளில் இறுதிவரை வரும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. அதையே பின்பற்றி அனேக மாணவர்கள் மாணவர் பருவத்திலேயே பள்ளியில் சேமிப்பு திட்டம் மற்றும் வீடுகளில் உண்டியல் முறையில் சேமிக்க ஊக்கப்படுத்தப்பட்டனர். அப்படி செய்யப்பட்ட சேமிப்பு அவர்களின் எதிர்பாராத தேவைகளை பூர்த்தி செய்தது .மேலும் இவ்வாறு சேமித்து எந்த பொருளையும் வாங்கும் போது அதன் மதிப்பு இன்னும் அதிகமாக தெரிந்தது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் உலக சேமிப்பு தினம் ஆனது சேமிக்கும் உணர்வே உள்ளடக்கிய வெவ்வேறு கருப்பொருளை கொண்டிருக்கும். இந்தக் கருப்பொருள்கள் மக்களை அதிகமாக சேமிக்கும் பழக்கத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றன.
அதேபோல் வங்கிகள் பிற நிறுவனங்கள் மக்கள் அதிகமாக சேமிக்கவும் அர்த்தமுள்ள முதலீடுகளை செய்யவும் பல திட்டங்களையும் கொண்டு வந்து செயல்படுத்தி வருகின்றன. எனவே பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளிலிருந்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஏனென்றால் அவர்கள் சேமிக்கும் பணத்தை பார்க்கும் போது சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்வார்கள். சேமிப்பு என்பது பணத்தை மட்டும் குறிப்பது அல்ல, நம்முடைய சிக்கனமான தண்ணீர் பயன்பாடும் மற்றவர்களுக்கான சேமிப்பாகவும் இருக்கட்டும்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}