- மீனா
சென்னை: உலக இதய தினம் செப்டம்பர் 29ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது இதய நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும் மற்றும் இருதய நோய் ஏற்பட்டால் எவ்வாறு அவற்றை கட்டுப்படுத்தலாம் என்ற தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்துடன் சேர்ந்து உலக இதய கூட்டமைப்பு இந்த சர்வதேச தினத்தை உருவாக்கியது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தீம் வைத்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான தீம் என்னவென்றால் use ❤️ know ❤️.
இந்த தீமிற்கான அர்த்தம் என்னவென்றால் உங்கள் இதயத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் அதை மிகவும் சிரத்தையுடன் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் இதயம் உங்களுக்கு மிக மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தவே இந்த தீமில் இந்த வருடம் இதய நோய் தினத்தை கொண்டாடுகிறார்கள்.
சிலரைப் பார்த்து உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் என்று கேட்டால் அவர்கள் எனக்கு அப்பா, அம்மா ஃபிரண்ட்ஸ் மற்றும் அவர்களுக்கு பிடித்தமானவர்களை தான் முதலில் சொல்வார்கள். ஆனால் முதலில் நம்மை நாம் நேசிக்க வேண்டும். எவர் ஒருவர் தன்னை முதலில் நேசிக்கிறாரோ அவரால் மட்டுமே மற்றவர்களையும் நேசிக்க முடியும். அந்த வகையில் தன்னை நேசிப்பவரால், தன்னுடைய உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு சிறப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முடியும்.
இதய நோய் மற்றும் பிற நோய்கள் வராமல் தடுப்பதற்கு முக்கியமாக நாம் நம் உடல் ஆரோக்கியத்தில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாமல் போவதன் விளைவாக வருடத்திற்கு 1.7 கோடி மக்கள் கார்டியோ வாஸ்குலார் நோயினால் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் அதிர்ச்சியான விஷயம்தான். மேலும் இதய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 70% மக்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மை காலங்களில் கூட நமக்குத் தெரிந்து சிறு வயதுக்காரர்கள் அதிக அளவில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்ற செய்தியை கேள்விப்படும் போது நாம் கலங்கி தான் போக வேண்டி உள்ளது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் அனைவருக்கும் தெரிந்ததுதான் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால், தூக்கம் இல்லாமல் இருப்பது, குறைவான நேரமே தூங்குவது, புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் ,பரம்பரை தன்மை போன்ற பல காரணங்கள் இருதய நோய்க்கான காரணிகளாக இருக்கின்றன.
இப்படி இருக்கும் பட்சத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றால் சர்க்கரை நோயாளிகள் தன்னுடைய சக்கரை அளவை சரியான விகிதத்தில் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் மற்ற நோய்கள் இருப்பவர்கள் அதற்கான பரிசோதனைகளை முறையாக செய்து கொள்வதும் மிகவும் அவசியம். மேலும் நாம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருந்தால் உடல் அசைவுகள் மிகவும் முக்கியமானது. எப்படி என்றால் உடல் பயிற்சி, நடை பயிற்சி போன்றவை நாம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதய நோய் முக்கிய காரணிகளில் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களும் முதன்மையாக இருக்கிறது.
நாம் வாழும் சூழலும் இன்று எவ்வளவோ மாற்றங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது நம் இதயத்திற்கு அது கேடானதாகவே அமைகிறது. அதனால் நாம் உண்ணும் உணவிலும் அதிகப்படியான அக்கறையை செலுத்த வேண்டும். அப்போதுதான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கும்.
இந்த உலக இதய நாளை கொண்டாடுவதன் பலனாக நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் முழு கவனத்தையும் செலுத்தி இனிவரும் நாட்களில் மாரடைப்பு போன்றவை வராமல் தடுக்க முயற்சி செய்வோம்.. என்ன நீங்கள் செய்வீர்களா??
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}