உலக சுகாதார தினம்.. ஆரோக்கியமான ஆரம்பம்.. நம்பிக்கையான எதிர்காலம்!

Apr 07, 2025,02:54 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஏப்ரல்- 7, 2025 திங்கட்கிழமை உலக சுகாதார தினம் என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஏழாம் தேதி கொண்டாடப்படுகிறது.


1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நல வாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வொரு ஆண்டும் 1950ல் இருந்து உலக நலவாழ்வு நாளாக கொண்டாடுவதாக தீர்மானிக்கப்பட்டது. அன்றிலிருந்து உலக நல வாழ்வு நிறுவனத்தார் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது, இந்த நாள் உலக சுகாதார தினமாக.


உலக சுகாதார தினத்தின் (தீம்) கருப்பொருள்:




இந்த ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் அதாவது தீம்  "ஆரோக்கியமான ஆரம்பம் நம்பிக்கையான எதிர்காலம்".  இந்த கருப்பொருள் தவிர்க்கக்கூடிய தாய் வழி மற்றும் குழந்தை இறப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் குறிக்கோளுடன் தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


தற்போதைய மதிப்பீடுகளின் படி ஆண்டுதோறும் சுமார்     300,000 பெண்கள் கர்ப்பம் அல்லது பிரசவத்துடன் தொடர்புடைய காரணங்களால் உயிரிழக்கின்றனர் . மேலும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் மாதத்தில் இறக்கின்றனர். சுமார் 2 மில்லியன் குழந்தைகள் பிறவாமல் இறப்பை சந்திக்கின்றனர்.


World Health Organization:(WHO ) உலக சுகாதார அமைப்பு மற்றும் அதன் கூட்டாளிகள் ஆரோக்கியமான கர்ப்பங்கள் ,பிரசவங்கள் மற்றும் பிறப்புக்குப் பிந்தைய நலனை ஆதரிக்கும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.


உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம்:


உலக சுகாதார அமைப்பு(WHO )என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனம் ஆகும் இது சர்வதேச பொது சுகாதார பிரச்சனைகள் மற்றும் அவசர நிலைகளுக்கான பதில்களை ஒருங்கிணைக்கிறது .இது ஜெனிவா, ஸ்விட்சர்லாந்தில் தலைமையகம் உள்ளது. மேலும் 6  பிராந்திய அலுவலகங்கள் மற்றும் உலக அளவில் 150 கள அலுவலகங்கள் உள்ளன.


உலக சுகாதார தினத்தின் நோக்கம் :


உலகளாவிய சுகாதார முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், பல்வேறு சுகாதார சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் சுகாதார மேம்பாட்டை ஊக்குவிப்பது இதன் நோக்கம்.


சிறப்பு செயல்பாடுகள்:


இந்த நாளில் உலகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் ,விழிப்புணர்வு பேரணிகள் ,ஆரோக்கிய கருத்தரங்குகள் ,இலவச சுகாதார பரிசோதனைகள் போன்றவை நடைபெறுகின்றன.


முக்கிய அம்சங்கள்:


 அனைவருக்கும் சுகாதாரம்(Health  for All) ஹெல்த் ஃபார் ஆல் என்ற நம்பிக்கையை வலியுறுத்துதல்.

உலகளாவிய சுகாதார சமத்துவம் மற்றும் அணுகல் சவால்களை நிவர்த்தி செய்ய செயல்படுதல்.


ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள்:


1. உணவு   2. உடற்பயிற்சி 3. உறக்கம்  4. நல்ல மனநலம் 5. வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல்.


நல்ல உடல் நலனும், ஆரோக்கியமும்தான் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பவை.. அவை நம்முடைய மகிழ்ச்சி மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள நம்முடைய பிரியமானவர்களின் நம்பிக்கையும் கூட. அது அவர்களுக்கு நாம் தரும் அற்புதமான பரிசும் கூட.. ஸோ, ஹெல்த் பற்றிக் கவலைப்படுங்கள், அக்கறை காட்டுங்கள்.. உங்களது ஆரோக்கியத்திற்காக நேரமும் ஒதுக்குங்கள்.


மேலும் சுவாரசியமான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்   ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்