- மீனா
"பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசியைக் கொஞ்சம் மறந்திருப்போம்"
40 வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு கமல் ஹாசன் படப் பாட்டு இது.. படம் வறுமையின் நிறம் சிவப்பு..!
"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்".. இது அதற்கும் பல காலத்திற்கு முன்னால் முண்டாசுக் கவி பாரதியார் முழங்கியது.
பசிக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தோர் பலர் உண்டு. அப்படிப்பட்ட உணவு குறித்த நாள்தான் இன்று.. இன்று உலக உணவு தினம்..!
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் வறுமை மற்றும் உணவு கிடைக்காமல் அல்லது உணவு இல்லாமல் பசியினால் வாடும் மக்களை குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த 150 நாடுகள் ஒன்றிணைந்து கொண்டாடுகின்றனர்.
உலக பசி புள்ளி விபரங்களின்படி உலகெங்கிலும் உள்ள 785 மில்லியன் மக்களுக்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்வதற்கு தேவையான உணவு கிடைப்பதில்லை. இந்த எண்ணிக்கையில் உலகில் உள்ள ஒன்பது பேரில் ஒருவருக்கு உணவு இல்லை என்று கணக்கிடப்பட்டு யாவரையும் அதிர்ச்சி அடைய செய்கிறது. பெரும்பான்மையான மக்கள் பசியுடன் வளரும் நாடுகளிலே அதிகமாக வாழ்கிறார்கள் என்பது மேலும் அதிர்ச்சியைத் தான் ஏற்படுகிறது. மேலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 45 சதவீத குழந்தைகள் இறப்பிற்கு காரணம் சரியான விகிதத்தில் ஊட்டச்சத்து உணவு அவர்களுக்கு கிடைக்காதது தான்.
அதாவது ஒரு வருடத்திற்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் போதுமான சத்தான உணவு கிடைக்காததனால் இறக்கின்றார்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலகத்தின் உள்ள மக்களின் பசியை தீர்க்க வேண்டும் என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனை தான். ஆனால் இந்த பசி என்ற பிரச்சனையும் தீர்க்கக் கூடியது தான் என்று அநேகர் நினைக்கிறார்கள் அதனால் தான் அவர்களும் கூட தன்னால் முயன்றவரை அனைவருக்கும் உணவு கொடுத்து ஆதரிக்கிறார்கள். பசியை போக்க வேண்டுமென்றால் முதலில் வறுமையை போக்க வேண்டும் வறுமையை போக்குவதற்கு வருமானம் தேவையாக இருக்கிறது.
இத்தகைய வருமானம் பெறுவதற்கு அவர்கள் வாழ்வாதாரங்களை கூட்டி வளமான வாழ்க்கைக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் இப்படி பல வழிகள் இருக்கும் பட்சத்தில் இதற்கான வழியை அரசாங்கம் வறுமையினால் வாடும் மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தேவைப்படுவோருக்கு அந்த உதவி சரியாக போய் சேருகிறதா என்பதில் தான் சிக்கலே இருக்கிறது. ஏனென்றால் கல்வி வழங்குவதால் அது வறுமை மற்றும் பசிக்கு எதிரான பாதுகாப்பானதாக மாறுகிறது.
வளரும் நாடுகளில் தான் இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதினால் அரசாங்கமும் இதில் தலையிட்டு சரியான தீர்வு காண்பதும் முக்கியமாகும். உலகத்தில் பசியுடன் மக்கள் இருப்பதற்கான காரணம் நமக்கு எல்லாம் தெரிந்ததுதான் .அது என்னவென்றால் உணவை வீணாக்குவதின் விளைவுதான் . இப்படி வீணாக்கப்படும் உணவு மற்றவர்களுக்கு போய் சேரும்போது அது அவர்களின் பசியில்லா வாழ்விற்கு உதவுகிறது. சமைத்த உணவுகள் மட்டும் வீணாக்கப்படுவதில்லை. அதற்கு மாறாகவும் வீணாக்கப்படும் உணவுகளில் காய்கறிகள், தானியங்கள் மற்றும் மாவு சத்துள்ள பொருட்கள் அதிகமாக இருக்கின்றன.
இந்த உணவுகள் விவசாய உற்பத்தியின் போது அறுவடை செய்த பின்பு சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு இல்லாத காரணத்தினாலும் வீணடிக்கப்படுகின்றன. இவ்வாறு உணவு கழிவுகள் அதிகமான உணவை உற்பத்தி செய்யும் தேவையை அதிகரிக்கின்றன. போதிய அளவு உணவு உற்பத்தி செய்யப்பட விட்டாலும் மக்கள் பட்டினி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உலக பசி பிரச்சனையை முழுவதுமாக நம்மால் தீர்க்க முடியாது ஆனால் நம்முடைய பங்கிற்கு உணவு இல்லாதவர்க்கு நாம் உணவு வழங்கலாம்.
அதுமட்டுமின்றி சிறு வயது முதலே நம்முடைய குழந்தைகளுக்கு உணவின் முக்கியத்துவத்தை குறித்து அவர்களுக்கு நினைப்பூட்டுவதன் மூலம் வருங்காலத்தில் இத்தகைய நிலை மாற வாய்ப்பு உள்ளது. ஆகையால் உணவை வீணாக்குவதின் பின்னால் இவ்வளவு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் உணவை வீணாக்குவதில்லை என்று இந்நாளில் உறுதி செய்து கொள்ளலாமே.
வயிறார சாப்பிடுங்க.. முடியும் வரை சாப்பிடுங்க.. முடியாத போது அதை வீணாக்காதீங்க.. முடிந்தவரை அடுத்தவர் பசியை ஆற்ற முயலுங்க.. அது புண்ணியமும் கூட!
நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!
CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}