World Dengue Day: ஆளையே அழிக்கும் டெங்கு காய்ச்சல்.. மழைக்காலங்களில் கவனம் அவசியம்!

May 16, 2024,06:00 PM IST

- சந்தனகுமாரி


டெங்கு என்பது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு வகை தொற்று. இந்தத் தொற்று நீடித்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். ஒரு சிறிய பூச்சியினால் உண்டாக கூடிய வைரஸ் மனிதனின் உயிரையே  அழிக்கக் கூடியதாக இருக்கிறது. அதுதான் டெங்கு வைரஸின் அபாயம்.  உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100- 400 மில்லியன் பேரை டெங்கு பாதிக்கிறது. இதைப் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 16ஆம் தேதி உலக டெங்கு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 


டெங்கு வைரஸ் பற்றி விரிவாக பார்ப்போம். உலக டெங்கு தினம் கொண்டு வரப்பட்டதன் முக்கியமான நோக்கம் டெங்கு எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது,  அதனுடைய பரவலை எவ்வாறு தடுக்கலாம், அதற்கு உண்டான சிகிச்சை முறைகள் போன்றவற்றை மக்கள் அறிந்து கொள்வது தான்.


தேசிய டெங்கு தினம் 2024 தீம்


ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தேசிய டெங்கு தினத்திற்கு ஒரு முக்கிய தீம் கொண்டு வருகிறது. அது போன்று இந்த ஆண்டு தீம்.. "டெங்கு தடுப்பு பாதுகாப்பான நாளைய நமது பொறுப்பு" என்பதாகும். டெங்கு நோயை பற்றிய விழிப்புணர்வு இந்த தீம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


டெங்கு என்றால் என்ன ?


பெண் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது டெங்கு. இந்த கொசு கடிப்பதன் மூலம் முதலில் காய்ச்சல் உருவாகிறது. 2023 ஆம் ஆண்டு சுமார் 91 இறப்புகள் டெங்கு காரணமாக பதிவாகியுள்ளன. கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தை இந்த பெண் கொசு உறிஞ்சும். இதன் மூலம் டெங்கு அடுத்தவருக்குப் பரவுகிறது. கொசு அடைகாக்கும் எட்டு முதல் பத்து நாட்களுக்குள் இந்தத் தொற்று வேகமாக பரவுகிறது. 




டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:


- காய்ச்சலின் ஆரம்பம் திடீரென்று 104 டிகிரி வரை இருக்கும்.

- கடுமையான தலைவலி ,கண்வலி, கண் அசைப்பதில் அழுத்தம், கண்களுக்கு பின்னால் வலி என்பது போல் இருக்கும்.

- உடல் முழுவதும் தசை மற்றும் மூட்டு வலிகள் அதிகமாக இருக்கும்.

- குமட்டல் ,வாந்தி ,பசியின்மை ,உடல் சோர்வு போன்றவையும் இருக்கும்.

- கைகள் முழுவதும் புண் மற்றும் சொரி சிரங்கு போன்று ஏற்படும்.


டெங்குவிலிருந்து மீட்பது எப்படி?


- டெங்கு காய்ச்சலை இரத்த பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

- டெங்கு என்று அறிகுறிகள் தென்பட்டால் பாதிக்கப்பட்டவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

- எந்த வகையான உணவு உட்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பச்சையாக உண்ணும் சாலட் வகைகளை தவிர்க்க வேண்டும். மேலும் எளிதில் ஜீரணிக்க கூடிய இட்லி போன்ற வகையான உணவுகளை உண்ண வேண்டும்.

- மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படும்போது இந்த தொற்றில் இருந்து விடுபடலாம்.


டெங்கு வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்?


குறிப்பிட்ட தடுப்பு யோசனைகள் கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும். அவை என்னவென்று பார்ப்போம்.


- தேங்கி நிற்கும் நீர்களை முதலில் அகற்ற வேண்டும். தேங்காய் மட்டை , சைக்கிள் டயர், பூந்தொட்டிகள், மேலும் தேவையற்ற சிலவற்றில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தி செய்யும் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


- வீடுகளில் ஆங்காங்கே ஓரமாக ஒதுக்கி வைத்திருக்கும் குப்பைகளை தினம்தோறும் எரித்து விட வேண்டும். அப்போது அங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை தடுக்கலாம்.


- வீட்டில் ஜன்னலோரங்களில் கொசுவலைகள் வைப்பதன் மூலம் கொசுக்கள் வீட்டினுள் வராமல் தடுக்க முடியும். மேலும் வெளியே செல்லும்போது கொசு கடியை தடுக்கும் லோசன்களை கை ,கால்களில் தேய்த்து விட்டு செல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் தேங்காய் எண்ணெயை கை, கால்களில் தேய்த்து விடலாம்.


- டெங்குவை உண்டாக்கும் கொசுக்கள் குறிப்பாக அதிகாலை மற்றும் பிற்பகல் சுறுசுறுப்பாக இருக்கும் அந்த நேரங்களில் நாம் வெளியே செல்வதை தடுக்க வேண்டும் .அப்போது டெங்குவிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.


- வீடுகளை துடைக்கும் போது எலுமிச்சை சாறு ஊற்றி துடைப்பதனால் கொசு வருவதை தடுக்கலாம்.


- பூச்சி  விரட்டியை பயன்படுத்துவதன் மூலம் கொசு வராமல் தடுக்க முடியும்.


டெங்குவை தடுக்க ஒரு தனி நபரால் மட்டும் முடியாது. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வீட்டையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவருடைய முக்கியமான கடமையாகும். குறிப்பாக மழைக்காலங்களில் அதிக அளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்