- மீனா
அயோடின் உட்கொள்ளுவதின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் தேதி அயோடின் குறைபாடு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை உலக அயோடின் குறைபாடு நோய் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
அயோடின் என்பது தைராய்டு ஹார்மோன்களை உருவாக்குவதற்கு உடலுக்கு தேவையான ஒரு கனிமமாகும். இந்த ஹார்மோன்கள் தான் இதயத்துடிப்பு, வளர் சிதை மாற்றம், உடல் வெப்பநிலை மற்றும் தசை சுருக்கங்கள் உள்ளிட்ட பல உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தைராய்டு ஹார்மோன்கள் இறக்கும் செல்களின் மாற்றப்படும் விகிதத்தையும் குறைக்கின்றன. உடலுக்கு தேவையான அளவு அயோடின் கிடைக்காத போது நம் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.
குறைந்த அளவு அயோடின் நாம் எடுத்துக் கொள்ளும் போது இவ்வாறான பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகின்றன. அவை:
கழுத்தில் வீக்கம்
எதிர்பாராத எடை அதிகரிப்பு
முடி கொட்டுதல்
சருமம் உலர்ந்து போதல்
கற்கும் விதத்தில் சிக்கல்
குறிப்பாக பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் போன்ற பல மாற்றங்கள் நம் உடலில் நிகழும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு குறைபாடு இருக்கும் பட்சத்தில் அது குழந்தையை பிரசவிக்கும் காலத்தை சிக்கலாக்க கூடும். மேலும் இவ்வாறு அயோடின் குறைபாடு உள்ள தாய்க்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மனநல குறைபாடு, பேச்சுக் குறைபாடு, காது கேளாமை போன்ற பிரச்சினைகளுக்கு வழி வகுத்து விடும்.
சமீபத்திய புள்ளி விவரத்தின் படி உலகில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அயோடின் குறைபாடினால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. சில உணவுகளை நாம் உட்கொள்ளுவதின் மூலம் அயோடின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும். பால், தயிர் ,சீஸ் போன்ற பால் சார்ந்த பொருட்களில் அதிக அளவு அயோடின் உள்ளது .அதேபோல் அயோடின் இருப்பதற்கான சிறந்த ஆதாரம் என்றால் அது அயோடைஸ் உப்பு என்று சொல்லப்படுகிற இந்துப்பு தான். மேலும் இறால், சூரை மீன், கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றிலும் அயோடின் அதிகமாக உள்ளது.
இது மட்டுமல்லாது சோளம், பச்சை பட்டாணி, பீன்ஸ், வேகவைத்த உருளைக்கிழங்கு, அவரைக்காய் போன்ற காய்கறியிலும் அதிகப்படியான அயோடின் சத்து உள்ளது. மேலும் பழங்களான கொடி முந்திரி பழம், ஸ்ட்ராபெரி, அன்னாசி பழம் போன்ற பழங்களிலும் அயோடின் அதிக அளவு உள்ளது .இதை நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும்போது இந்த அயோடின் குறைபாடை முற்றிலும் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ வழி செய்யலாம். எப்படி என்றால் பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் 150 மில்லி கிராம் அயோடின் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கர்ப்பிணி பெண்கள் 220 மில்லி கிராம் அயோடின் தான் எடுத்துக் கொள்ளும் உணவில் இருக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்வதும் நல்லது.
அயோடின் குறைபாடு வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக தான் இருக்கிறது. இதனால் அயோடின் கலந்த உப்பு மற்றும் அயோடின் உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அயோடின் குறைபாட்டினால் ஏற்படும் அபாயத்தை குறைக்க வழி செய்ய முடியும். ஏனென்றால் புரதங்களை உருவாக்குவதில் அயோடின் பங்கு மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள நரம்புகள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு இந்த அயோடின் உதவுகிறது.
ஏனென்றால் ,அயோடின் குறைபாட்டினால் ஏற்படும் தாக்கத்திலிருந்து நாம் தப்பித்துக் கொள்வதற்கு அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்வதின் மூலம் நாம் பாதுகாப்பான ஒரு வாழ்க்கை சூழ்நிலையை நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடும். அதுமட்டுமல்ல நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் அயோடின் குறைபாட்டினால் ஏற்படும் அபாயத்தை எடுத்துக் கூறி அவர்களை விழிப்புணர்வு அடையச் செய்யலாம் .இதன் மூலம் இந்நாளை கொண்டாடுவதன் முழு அர்த்தத்தை நாம் விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குவது நமது ஒவ்வொருவருடைய கடமையும் கூட.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}