ஆடி மாதத்தின் முக்கிய வழிபாடு.. வளமான வாழ்வு தரும் வரலட்சுமி விரதம் 2024

Aug 16, 2024,09:01 AM IST

சென்னை: ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாட்களில் ஒன்று வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையை வரலட்சுமி விரதம் என கொண்டாடுகிறோம்.


ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும் ஆண்டுகளில் மட்டும் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்தில் வருவது உண்டு. இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் நல்வாழ்விற்காகவும், குடும்ப சுபிட்சத்திற்காகவும், திருமணமாகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்பதற்காகவும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.


யாரெல்லாம் வரலட்சுமி விரதம் இருக்கலாம்?




உண்மையில் வரலட்சுமி விரதத்தை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். வரலட்சுமி விரதம் எதற்காக இருக்கப்படுகிறது, இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதற்கு புராணங்களில் பல கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றில் பிரபலமாக சொல்லப்படுவது, சாருமதி என்ற ஏழைப்பெண், மிகுந்த பக்தி உடையவள். தன்னுடைய கணவர், குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே வாழும் சிறந்த குணவதி. அப்படிப்பட்ட சாருமதியின் கனவில் காட்சி கொடுத்த மகாலட்சுமி, வரலட்சுமி விரதம் இருக்கும் முறைகளை சொல்லிக் கொடுத்து, இந்த விரதத்தை தொடர்ந்து இருக்கும் படி சொல்லி உள்ளார். அவளும் அதன் படியே இருக்க, வருடத்திற்கு வருடம் அவர்களின் குடும்பத்தின் செல்வ நிலை என்பது உயர்ந்து, நிறைவான, வளமான வாழ்க்கையை வாழ்ந்தாள் என்கின்றன புராணங்கள்.


நம்பி வழிபட்டால் நலம் தருவாள் மகாலட்சுமி


வாழ்வில் பலவிதமான துன்பங்களை அனுபவித்து, வாழ்க்கையில் இருள் சூழ்ந்து, பாதை தெரியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு வரங்கள் பல தந்து, வளமான வாழ்க்கையை தருபவள் தான் வரலட்சுமி. தன்னை நம்பி வழிபடுபவர்கள் கேட்கும் வரங்களை தருக் கூடிய வரலட்சுமி, மகாலட்சுமியின் அம்சமானவள். ஒருவருக்கு தான் அளித்த செல்வத்தை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார்? யாருக்காவது தானம் செய்கிறாரா? எந்த அளவிற்கு இரக்க குணத்துடன் வாழ்கிறார் என்பதை மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பார்க்கும் நாளை வரலட்சுமி விரதம் ஆகும். 


வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சுமியை வாசலில் இருந்து, அவளுக்குரிய மந்திரங்கள், துதிகளை சொல்லி வீட்டிற்குள் அழைத்து வந்து, வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். நம்மால் முடிந்த எளிமையான உணவுகள் அல்லது பழங்களை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். சர்க்கரை பொங்கல் அல்லது கற்கண்டு சாதம் படைப்பது சிறப்பானதாகும்.


லலிதா சகஸ்கரநாமம் - அபிராமி அந்தாதி படிக்கலாம்




இந்த நாளில் மகாலட்சுமி அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு அம்பாளின் வடிவத்திற்கு பூக்கள், அக்ஷதை, குங்குமம், 108 நாணயங்கள் ஆகிய ஏதாவது ஒன்றை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அம்மனுக்குரிய லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பாடி வழிபட வேண்டும்.


சுமங்கலி பெண்கள் வரலட்சுமி விரதம் அன்று தாலிக்கயிறு மாற்றிக் கொண்டால் கணவர் ஆயுள் பலப்படும். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ம் தேதி வருகிறது. அன்றைய தினம் காலை 6 முதல் 07.20 மணி அல்லது காலை 9 முதல் 10.20 வரையிலான நேரத்திற்குள் மகாலட்சுமிக்கு பூஜை செய்து, தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வரலட்சுமி பூஜையை செய்யலாம். ஆனால் தாலிக்கயிறு மாற்றுபவர்கள் காலை நேரத்தில் மட்டுமே மாற்றிக் கொள்ள வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்